FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Yousuf on May 12, 2012, 02:28:15 PM

Title: விண்டோஸ் நேரம்!
Post by: Yousuf on May 12, 2012, 02:28:15 PM
கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். “Work”, “School”, “Fun” எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினை http://code.google.com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.