FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 30, 2011, 02:53:37 PM
-
பிறை சூடும் வெண்ணிலவே !!
வெண்திரை போட்டு மறைப்பதென்ன ?
வேதனை கலந்த வெக்கத்தில் வாடுகிறாயா?
என்னுயிரில் கலந்த பூங்கொடியே !...
இரவில் ஜொலிக்கும் நட்சத்திரமாய்
என் இராஜ்ஜியத்தில் நீ ஜொலிக்கிறாய் !!
இடை வெளியின் துன்பத்தை கொடுக்காமல்
என் இமைகளில் வந்து வசிக்கிறாய் !!...
சொந்தம் போடும் வேட்டையில்
சொக்குப்பொடி போட்ட கள்ளியடி நீ !..
சீராட்டும் வேளையில், என்
இனிய சாரலாய் வருபவள் நீ !...
பிறை சூடும் வெண்ணிலவே !!
இந்த இளையஞனின் நெஞ்சை
கொள்ளை கொண்ட
பட்டத்து ராணியடி நீ !!...
-
nice kavithai ;)