FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on May 10, 2012, 03:17:57 PM

Title: த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்!
Post by: Yousuf on May 10, 2012, 03:17:57 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.magazine.ayurvediccure.com%2Fwp-content%2Fuploads%2F2009%2F03%2Fcurd.jpg&hash=1c6b436af529275ec35206dfac0ce0f113aa26ce)

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.