FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 10, 2012, 02:40:36 PM

Title: நீ மட்டுமே அறிவாய்
Post by: Dharshini on May 10, 2012, 02:40:36 PM
நீ...
என் இதயம் நுழைந்து
காதல் முதல் கவிதை வரை
கற்றுத் தந்தாய்...
என் சின்னச்சின்ன ஆசைகள்...
சின்ன சின்ன பயங்கள்...
நீ மட்டுமே அறிவாய்...

நீ...
என் முகம் பார்த்தே மனமுரைப்பாய்...
என் விழி பார்த்தே வலிதுடைப்பாய்...
புயலாய் வரும் கோபத்தையும்
புன்னகைத்தே வென்றிடுவாய்...
விழித்தாண்டும் கண்ணீரையும் உன்
விரல் நுனியில் வதம் செய்து விடுவாய்...

நீ...
என் வாழ்வின் வழியாவாய்...
என் விழியின் வழியிமாவாய்...
என் உடலின் உயிராவாய்...
என் உயிரின் உறைவிடமுமாவாய்...
என் கண்கள் தேடும் காட்சியாவாய்...
என் கண்களில் வாழும் காதலுமாவாய்...

என்னுயிரே...
உன் காதலுக்கு ஈடாய் எதைத் தருவது?
உன் காதலுக்கு ஈடான....
என் காதலைத் தவிர!
Title: Re: நீ மட்டுமே அறிவாய்
Post by: suthar on May 10, 2012, 08:09:01 PM
dhars ma kaathaluku kaathalai thavira veruu ena thara mudium.. athu onu thana athuku ariya marunthu.....
Title: Re: நீ மட்டுமே அறிவாய்
Post by: Dharshini on May 11, 2012, 02:01:15 PM
inondrum thara mudium suthar hahaaaaaaaaaaa
Title: Re: நீ மட்டுமே அறிவாய்
Post by: suthar on May 11, 2012, 11:50:57 PM
aama dhars ma..............