(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fmore_pic_gallery%2Fcmalarnews_10123842955.jpg&hash=2a276882b636355d4023e5c9c80b8165222cb7a2)
கூகுள் சர்ச் இஞ்சின் தான் இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சினாக உள்ளது. இதனாலேயே கூகுள் தந்த குரோம் பிரவுசரிலும் அதன் சர்ச் பாரிலேயே கூகுள் தேடுதல் திறன் தரப்பட்டுள்ளது. இதனால் பலர் கூகுள் குரோம் பிரவுசருக்கு மாறினார்கள்.
இதனைத் தொடர்ந்து பயர்பாக்ஸ் பிரவுசருக்கும் ஒரு தேடுதல் ஆட் ஆன் தொகுப்பு இணையத்தில் வெளியானது. இது சைபர் சர்ச் (Cyber search) என அழைக்கப்படுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பு ஏறத்தாழ குரோம் பிரவுசரின் சர்ச் இஞ்சின் திறனுடன் இயங்குகிறது. இதனால் இணையத் தேடல் எளிதாகிறது.
இந்த ஆட் ஆன் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து இயக்குவது எனப் பார்க்கலாம்.
1.உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே பயர்பாக்ஸ் பிரவுசர் இருந்தால் அதனை இயக்கிக் கொள்ளவும். இல்லாதவர்கள் http://www.mozilla.com/enUS/firefox/personal.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று பிரவுசருக்கான பைலை டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இயக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து சைபர் சர்ச் ஆட் ஆன் தொகுப்பை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதற்கு https://addons.mozilla.org/en-US/firefox/search/?q=cyber+search&appver=&platform= என்ற முகவரியில் உள்ள தளத்தை நாடவும். அங்கு “add to Firefox” என்று இருக்கும் பச்சை வண்ண பட்டனில் கிளிக் செய்திடவும். தானாக ஆட் ஆன் இணைக்கப்படும். இனி மீண்டும் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடி மீண்டும் திறக்கவும். இப்போது சைபர் சர்ச் இயக்கத்திற்குத் தயாராய் இருக்கும்.
3. இனி நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்திடும்போதே, தளங்கள் வேகமாகத் தேடித் தரப்படுவதனைக் காணலாம்.