FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: Dharshini on July 30, 2011, 05:54:44 AM
-
கமகமக்கும் மோர் குழம்பு ஓ.கே. இதென்ன மோர் சாம்பார்!? யோசிக்கிறத விட்டுட்டு செஞ்சு பாருங்க... உடலுக்கு நல்லது. சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் இதோட சுவை பிரமாதமா இருக்கும். இட்லி, தோசை, வடை, பொங்கல், சாதம்... எல்லாத்துக்கும் சூப்பரா மேட்ச் ஆகும். கோடைக்கேத்த சூப்பர் சாம்பார்!
தேவையான பொருட்கள்:
மிளகு - 25 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50 கிராம்
கெட்டியான மோர் - 3 கப்
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 50 கிராம்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
தேங்காய் பால் - 2 கப்
நெய் - 100 கிராம்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை குழைய வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
* பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
* கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும்.
* கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது