FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 06, 2012, 01:48:36 AM
-
என் தாயை
பெற்றேடுதவள் நீ
அன்பான அழகான
பண்பான அறிவான
என் தாயை
எனக்கு பரிசாக
தந்தவள் நீ
பொக்கிஷமான நீயே
இன்னொரு பொக்கிஷத்தை
பெற்றெடுத்தாய்
உன்னால் இந்த பூமியில்
உதித்தவள் என் தாய்
வந்த வேலை முடியாமலே
சென்று விட்டால் பாதியிலே
நீயும் உன் மகளுக்கு
துணையாக
இந்த உலகை
மறந்து விண்ணுலகை
நேசிக்க சென்று விட்டாய்
நீ
விண்ணுலகில் அமைதியுடன்
இளைப்பாற
இறைவனை பிராத்திக்கிறேன்
-
nice dharshini......