FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on May 05, 2012, 06:29:26 PM

Title: இந்தியா வல்லரசு ஆகுமோ !
Post by: Jawa on May 05, 2012, 06:29:26 PM
வேஷம் போட்டவர்கள்
கோஷம் போட
கற்றுகொடுத்தார்களா !

கட்சிகொடி தூக்கியவர்கள்
எல்லாம்
கோடியை பதுக்கி
கொண்டார்களா !
இல்லை
தேசியகொடி தூக்கியவர்கள்
எல்லாம் புதைந்துவிட்டாகள்
என்ற தைரியம்தானோ !

ஊழல் நம்நாட்டில்
ஊறிப்போனது
கடமை உணர்வு எல்லாம்
கலைந்துபோனது !

கல்லுரி தூண்களில்
விவசாயி பணம் பதிந்துபோனது
விவசாயி இடத்தில்
கல்லூரி தூண்கள் எழும்பிகொண்டே
இருக்கிறது !

படிக்க போனேன்
பணம் பட்டம் கொடுத்தது
வேலை வாங்க
போனால் பட்டம்
தூங்குது
பணம் விளையாடுது !
Title: Re: இந்தியா வல்லரசு ஆகுமோ !
Post by: Yousuf on May 06, 2012, 08:06:31 PM
நல்ல வரிகள் ஜாவா மச்சி!

என்னை கேட்டால் இந்தியா வல்லரசாவதை விட முதலில் நல்லரசு என்ற பெயரை எடுக்கட்டும் பிறகு வல்லரசை பற்றி யோசிக்கலாம் என்பேன்!

தொடரட்டும் உங்கள் கவிதைகள்!
Title: Re: இந்தியா வல்லரசு ஆகுமோ !
Post by: suthar on May 07, 2012, 12:18:17 PM
thesiya kodi yenthiyargal ellam thesiya vaathigala....
mannikavum.... thesiya kodi yenthiya kootam than ipozhuthu ariyanaiyil. irunthum enna micham. paamaranku....
variyavaunuku ondrum nigazhthidavillaiye.....