FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 04, 2012, 10:50:58 AM

Title: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 10:50:58 AM
அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.fastchickenpoxcure.com%2Fblog%2Fwp-content%2Fuploads%2F2010%2F09%2Fchicken-pox-treatment.jpg&hash=21f5f0619690bcd782a0ce2b09e5a090140260cf)

கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.


கசகசா, மஞ்சள் துண்டு

2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.

எலுமிச்சை வைத்தியம்

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.

கருமை நீங்க

அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீங்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சசம் பழம் சாறு எடுத்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.

முகப்பரு அகல

அம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

இதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 10:53:01 AM
ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg138.imageshack.us%2Fimg138%2F8029%2F0k7o.jpg&hash=0453973057ee437ab5c7b722d522523a119df6e7)

வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.


ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
 
* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 11:00:25 AM
ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.hear.org%2Fstarr%2Fimages%2Fimages%2Fplants%2Ffull%2Fstarr-080604-6176.jpg&hash=d316bdfdb520271c597385e989f77f6d6f0f894a) (http://www.friendstamilchat.com)


தோட்டங்களில் அலங்கார மலராக வளர்க்கப்படும் கல்யாணமுருங்கை ஏராளமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும், அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.


இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

வீக்கம் குறையும்

இலைகள் பேதி மருந்து சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப் பயன்படும். இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லியை 10 நாள் சாப்பிட வலி தீரும். இதன் இலைச்சாறு 15 மி.லி., ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும். இலைச் சாறு 50 மி.லி., தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

மலடு நீங்கும்

இதன் இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

கிருமிகள் வெளியேறும்

இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30 மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

இலைச்சாறு 10 மில்லியுடன் வெந்நீர் 10 மில்லி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும். ஒரு தேக்கரண்டி மோரில் இலைச்சாற்றினை கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும். இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

கண்நோய்க்கு மருந்தாகும் மரப்பட்டை

கல்யாண முருங்கையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டவை. பட்டை துவர்ப்புள்ளது. ஜுரத்தைப் போக்கும், பூச்சிகளை அகற்றும், பாம்புகடிக்கு மருந்தாகும். ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மில்லி பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மில்லி வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 11:05:23 AM
ஜலதோஷத்தை விரட்டும் தும்பைப் பூ!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimageshack.us%2Fscaled%2Fthumb%2F809%2F52m3.jpg&hash=0d0b02ebf2f79f0dd07b6ea307121114baf9d94f)


மழைக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஜலதோஷதம் பிடித்துக்கொள்ளும். அதனை விரட்ட வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய மருந்து கஷாயம்தான். அதும் தும்பை பூவை பாலில் போட்டு காய்ச்சி குடிக்கனும்னா சொல்லவா வேனும்.. ஜலதோஷதம் நம்மள விட்டே ஓடிப்போகும். செய்துதான் பாருங்களேன். அப்புறம் சொல்லுவீங்க பாட்டியோட வைத்தியத்தப்பத்தி.....


தும்பைப் பூ
 
தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

அத்திக்காய்
 
அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி,   துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.

அக்கரகாரம்
 
மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.

3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும்.
 
மிளகு
 
இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கீல் வாயு நோய் குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 11:10:32 AM
பித்தத்திலிருந்து விடுதலை பெற....!


பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...


* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 11:16:16 AM
உதடு வெடிப்புக்கு...


விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்......


அருமருந்தான அருகம் புல்....

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.

பல் ஈறு நோய்களுக்கு.....

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

உதடு வெடிப்புக்கு...  
 
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
 
கட்டி கரைய....

கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 11:21:31 AM
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!


வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....


பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
 
கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.
 
தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 11:24:37 AM
வயிற்றுப் போக்கா? கொய்யா இலை சாப்பிடுங்க!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimageshack.us%2Fscaled%2Fthumb%2F827%2Fo63s.jpg&hash=8b09552097ec3b7ca4ccafc80b0c4c42c8fa5627)

கொய்யாப்பழத்தில் சத்து உள்ளது என்பதுபோல் அதன் இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது.  வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் ஆற்றல் படைத்தது கொய்யா இலை என்றால் அது மிகையல்ல........


* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 11:27:14 AM
மூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs30.postimg.org%2Ft53pu75ht%2Ffig_wasp_3.jpg&hash=13a46d60036b620ead05b410e1d0c25229fa8e16)

வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

* அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

* அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

* முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைக்வள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

* அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.

* அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.

* அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

* அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:10:15 PM
தொண்டை கரகரப்பா...?


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.throatinfectionsymptoms.net%2Fwp-content%2Fuploads%2F2011%2F12%2Fthroat-infection-symptoms.gif&hash=6c8349ad706fee96d322fd2e2b31b2dd208df025)

வழிமுறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் இனிமையான குரலுக்கு எப்பொழுதும் நீங்கள்தான் உரிமையாளர்...!


குரல் மாற்றத்தை சரிசெய்ய:

கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

தொண்டைப் புண் ஆற:

வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.

தொண்டை நோய்:

மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.

தொண்டை கரகரப்பு குணமாக:

சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

தொண்டைக் கட்டு குணமாக:

மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.

தொண்டை சதை வளர்ச்சி குறைய:

வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.

தொண்டை சதை குணமாக:

புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.

ஈறுகளில் ரத்தக்கசிவு குணமாக:

இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு நிற்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:13:06 PM
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்!


கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....


இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:15:07 PM
அமீபியாசிஸ் நோயும்.. பூண்டு ரசமும்


சுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடம் கழித்து சூடு ஆறியதும் 2 ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள். 1 மாதம் - 2 மாதம் இப்படி செய்து வாருங்கள். அமீபியாசிஸ் எனப்படும் குடல் கிருமி அழற்சி நோய் கட்டுப்பட்டு உடல் நலம் பெறும். பூண்டைப்பற்றி ஒரு புராணமே எழுதலாம். குடல் நோய்களைப் போக்குவதில் பூண்டுக்கு நிகர் வேறெதுவுமில்லை.


நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் பூண்டுக்குப் பல்வேறு வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவத் தன்மை இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாமலேயே இருக்கிறது.

எகிப்திய நாகரிகத்தை உள்ளிட்ட பல்வேறு பண்டைய நாகரிகத்தில் பூண்டு ஒரு உணவாகவும், மருந்தாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அப்போதைய எல்லா நோய்களுக்குமே மருந்தாகப் பூண்டு பயன்பட்டது. மூச்சுத் திணறல் போன்ற உபாதைகளுக்கும், சரும நோய்களுக்கும் பாபிலோனியர்கள் பூண்டைப் பயன்படுத்தியதாகச் சான்றுகள் உண்டு. புகழ் பெற்ற கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கூட பூண்டின் பெருமைகளைப் புகழ்ந்திருக்கிறார். புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் B, C இவை அத்தனையும் பூண்டில் பொதிந்திருக்கின்றன.

பூண்டின் நோய் தீர்க்கும் தன்மையில் அதன் வாசனை பெரும் பங்கு வகிக்கிறது, எனலாம். கிருமிகளைக் கொல்வது பெரும்பாலும் இந்த வாசனைதான். பூண்டு எண்ணெய்க்கு பெனிசிலின் சக்தியில் பத்தில் ஒரு பங்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை. பல்வேறு தாவரங்களின் மருத்துவத் தன்மையை ஆராய்ந்த ரஷிய ஆய்வாளர் ஒருவர் பூண்டை மருத்துவ உலகில் மிகப் பெரிய அளவில் அறிமுகப்படுத்தினார். இதனால் ரஷியன் பெனிசிலின் என்று குறிப்பிடும் அளவுக்குப் பூண்டு பிரபலம் ஆனது.

குடல் உபாதைகள், மூச்சுக் குழாயில் தொல்லை, வயிற்றில் புழு, பூச்சிகள், சரும வியாதிகள், குடற்புண் ஆகியவற்றுக்கு அருமருந்தாகிறது என்பது எகிப்து, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதுமையின் அடையாளங்களைப் பூண்டு முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. ரத்த சுத்திகரிப்புக்குப் பூண்டு ஒரு மாமருந்து ஆகும். மூட்டு வலி, முடக்கு வாதம் போன்றவற்றுக்குப் பூண்டின் மருத்துவ உபயோகம் பலன் தரவல்லது. வலி இருக்கும் இடங்களில் பூண்டை, வெட்டித் தேய்த்தால் பலன் கிடைக்கும் என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

சிலருக்கு இயற்கையாகவே பூண்டின் வாசனைப் பிடிக்காது. எனவே அவர்கள் அதை உணவில் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்குப் பூண்டின் மருத்துவத் தன்மைகள் மறுக்கப்பட வேண்டுமா? என்றால் வேண்டியதில்லை. அவர்களுக்கும் ஏற்ற வகையில் இப்போது பூண்டு மாத்திரைகள் வந்துவிட்டன. காப்ஸ்யூல் வடிவில் கிடைக்கும் இந்த மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் மூன்று கிராம் பூண்டு மூடி வைக்கப்பட்டிருக்கிறது.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:18:04 PM
ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!


இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.


பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:23:28 PM
புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...


எதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள்! அப்படின்னா இது உங்களுக்குதான்.

மசக்கையின்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.. நாமதான் அதுக்கு ஏதாச்சும் பிடிச்சதா பண்ணி சாப்பிணும்.

நெல்லுப்பொரி இருக்குல்ல அதைக் கஞ்சியா காச்சி சாப்பிட்டா குமட்டாது. வாந்தியும் நிக்கும். நல்லா பசி எடுக்கும். இத மட்டும் தொடர்ச்சியா சாப்பிட்டு வந்தால் சரியாப் போகும்.

சிறுநீர் சரியா போகலையா.....

வெயில் அதிகமானதுல இருந்தே சிறுநீர் சரியா போகல... ஒரே கடுப்பா இருக்கு... சிறுநீர் கழிச்சப்புறம் ஒரே எரிச்சல், அடிவயிறு வலி ஊசியால குத்துறமாதிரி இருக்குனு சில பேர் புலம்புவாங்க... ஆனால், நீர்க்கடுப்புக்கு வெயில் மட்டுமே காரணம் இல்ல.. நேரத்துக்கு சாப்பிடாம இருக்குறது. சரியான தூக்கமில்லாம இருக்குறது... தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல்.. இதனாலேல்லாம் தான் நீர்க்கடுப்பு வருது... மொதல்ல இந்த பழக்கங்கள மாத்திக்கணும்...

சீரகம், சோம்பு, வெந்தயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை- இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம். இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்.

வேனல் காலமான இந்த காலகட்டத்துல நெறயா தண்ணி குடிக்கணும்.

நகம் கடிக்கும் குழந்தையா....

எம் பொண்ணு ஓயாம நகம் கடிக்கிறா.... நானும் எவ்வளவோ தடுத்துப் பாத்துட்டேன்.. ஆனா முடியலனு தவிக்கிறங்க தாய்மார்களுக்கு.....

நகம் மேல மருந்து தடவுறது தற்காலிக வைத்தியம்தான்.. நிரந்தரமா அந்த பழக்கம் நிக்கணும்னா வயித்துல இருக்குற கிருமிய வெளியேத்தணும். வயித்துல கிருமி இருக்குற குழந்தைகள்தான் நகத்தக் கடிக்கும். தூங்குறப்போ அரைக்கண் மூடித் தூங்கும். முகம் எப்போதும் வாடிப்போயி வெளிறியே இருக்கும். குழந்த ஏதோ சிந்தனையிலேயே இருக்கும். பதட்டமா இருக்கும்.  இது எல்லாமே வயித்துல இருக்குற கிருமிக படுத்துற பாடுதான்.

அதனால கிருமிய வெளியேத்திட்டா குழந்த நல்லாயிடும்.

இப்ப இத கவனமா கேட்டுக்கங்க.....

இஞ்சி - 1 துண்டு. முருங்கைப்பட்டை - 1 துண்டு எடுத்து ரெண்டையும் இடிச்சி நல்லா சாறு எடுத்து அந்த சாறோட கொஞ்சம் வெற்றிலை சாறையும், தேனையும் அளவாக் கலந்து 10 நாளுக்கு ஒருதடவ மாதத்துல மூணு தடவை ஒரு வேளைக்கு குடுத்து வாங்க. இப்பிடி மூணு மாசம் குடுத்துக்கிட்டு வந்தால், வயித்துல இருக்குற பூச்சியெல்லாம் தானா வெளியேறிடும்.

நகச்சுத்திக்கு......

விரல்ல நகச்சுத்தி மாதிரி வந்து வீங்கிக்கிட்டு ரொம்ப வேதனப்படுத்துது... ஒடையவும் மாட்டேங்குது.. அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிச்சிட்டுருக்கீங்களா....?
   
கண்ட தண்ணியவும் குடிக்கிறது.. அளவுக்கு மீறுன அலைச்சல்.. சரியான தூக்கமில்லாதது... இதுனால ஏற்படுற உஷ்ணத்துல வர்றதுதான் இந்த மாதிரி கட்டியெல்லாம்...

சரி இப்ப சொல்ற மருந்த கவனமா கேட்டுக்கங்க...

சின்ன வெங்காயம் 5, கறிமஞ்சள் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, வசம்புப் பொடிதலா 5 கிராம், சுக்கு ஒரு துண்டு, கொஞ்சம் முருங்கை இலை இது எல்லாத்தையும் சேத்து அரச்சி, அதுல எலுமிச்சை சாறு 25 மிலி விட்டு குழச்சி நகச்சுத்தி வந்த இடத்துல பத்து போட்டு, வெள்ளத் துணிய வச்சி கட்டுப்போட்டுக்கிட்டு வந்தால், 1 வாரத்துல எல்லாம் சரியாப்போயிடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:26:19 PM
மூளை பலம் பெற......


ஒரு மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் மூளையின் வளர்ச்சியில் நம் பங்கு என்ன? நம் மூளையை சுறுப்பாக இயங்க வைக்க எளிய வழிமுறைகள்...!

* சிறிது தண்ணீ­ரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிகொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
   
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:30:26 PM
கை நடுக்கத்திற்கு வெள்ளைத்தாமரை!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.widescreenwallpapers.org%2Fwallpapers%2Fpreview%2Fw%2Fh%2Fwhite-lotus-widescreen-wallpaper-3.jpg&hash=ab1c48723258a5cd12848027e464da0f2c67fe4d)

சில நோய்களுக்கான வைத்தியத்தை நம்முடைய வீட்டில் எளிய முறையில் செய்து கொள்வதற்காக அறிந்து கொள்ள வேண்டிய சில மருத்துவக் குறிப்புகள்:


செருப்புக் கடி:

பச்சை மூங்கில் குச்சியை துண்டாக வெட்டி எடுத்து நீர் விட்டு மைய அரைத்து செருப்புக்கடியின் மீது தடவிவர குணமாகும்.

தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் இட்டு கருக்கி எடுத்து அதனை தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணை குழப்பி செருப்புக் கடிபட்ட இடத்தில் தடவிட குணமாகும்.

தேள் கடி:

தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்­ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

ஆண்மைக் குறைவு:

மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

தாது விருந்தி:

முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

உடல் மெலிய:

100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.

இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.

கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீ­ர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.

நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

கை நடுக்கம்:

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.

வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:33:30 PM
சொரசொரப்பான தோலை மிருதுவாக்கும் கொத்தமல்லி


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-5Q_ejN5vNkw%2FTiZqfX_eLtI%2FAAAAAAAABvs%2FJWq009xrZBQ%2Fs400%2FSoft-Coriander-Leaves-Innate-Health-Secrets.jpg&hash=950589338af3ae544ac5ceb2bc98b920a7ae65af)

நாம் நம் சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களிலுள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்வோமா.....

* வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வெளியாகும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.

* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்­ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் காலில் சாதாரணமாக வரக்கூடியது சேற்றுப்புண். இதை குணமாக்க, கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு, மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் போதும். சேற்றுப்புண் ஆறிவிடும்.

* சிலருக்கு தோல் நோய்கள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து அந்த சொரசொரப்பான இடத்தின் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 04, 2012, 01:38:17 PM
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fcommons%2Fthumb%2F4%2F43%2FPearl_millet_after_combine_harvesting.jpg%2F800px-Pearl_millet_after_combine_harvesting.jpg&hash=8864cb262bd43690777657bf2ceeb2ffe62cc4f2) (http://www.friendstamilchat.com)

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...
 
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள்  புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...
 
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....
   
 உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.
 
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.
 
* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 05:56:43 PM
வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் பப்பாளிப் பால்!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.lose-weight-with-us.com%2Fimages%2Fpapaya.jpg&hash=653328d08e82fe2bce063505564b7f2848c0b211)

ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்....

யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 05:59:51 PM
இடைவிடாத தும்மலுக்கு...!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftopnews.ae%2Fimages%2FSneezing.jpg&hash=8202b2a5a86b844ccc5b8cdf9a1f21259c639bed)

காலையில எழுந்தா விடாத தும்மல்.. அது நிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது. முன்னையெல்லாம் எப்பவாச்சும்தான் வரும்.. இப்ப அடிக்கடி வருது பாட்டி. அதுக்கு ஏதாவது மருந்து சொல்லுவீங்கன்னுதான் வந்தேன்.

கடலையை வாயில் போட்டு மென்று அதக்கியபடியே அமுதா சொன்னதைக் கேட்ட பாட்டி, தும்மல் வரதுக்கு பல காரணங்கள் இருக்குடியம்மா.. மழையில நனைஞ்சா மட்டுமில்ல.. தூசியினாலயும் வரும். அஜீரணக் கோளாறும், மலச்சிக்கலும் இருந்தா மூலச்சூடு அதிகமாயி கூட தும்மல் வரும். எல்லாத்துக்குமே நுரையீரல்ல ஏற்படுற பாதிப்புதான் காரணம். முக்கியமா உடல் சூடானா, மூக்குல நீர் கோத்து தும்மல் உண்டாகும்பாங்க.

பொதுவா அஜீரணக் கோளாறு ஏற்படாம பாத்துக்கணும். அதிக தூசில போகக்கூடாது. ஐஸ்வாட்டர், கூல்டிரிங்ஸ்னு அதிக குளிர்ச்சியா இருக்குற பொருள்கள சாப்பிடக் கூடாது. அதோடு...

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, நறுக்குமூலம், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், இவற்றை வாங்கி காயவச்சு, சம எடை சேர்த்து இடிச்சி பொடியாக்கி வச்சிக்கிட்டு, காலை, மாலைன்னு ரெண்டு வேளையும் ஒரு மண்டலம் சாப்பிடு  குணமாயிடும் என்றார்.

பாட்டி மருந்து சொல்லி முடிக்கவும், அமுதாவின் கிண்ணத்தில் இருந்த கடலை தீர்ந்து போகவும் சரியாக இருந்தது. பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அமுதா.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 06:02:22 PM
பசியைத் தூண்டும் பெருஞ்சீரகம்!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.fashioncentral.pk%2Fblog%2Fwp-content%2Fuploads%2F2009%2F02%2Ffennel-fruits.jpg&hash=ff66e5f8f4ff52360bf067e6b9af8b608c856acb)

நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படும் பெரும்பாலானவை உணவுப் பொருட்கள்தான். ஆதலால், நாம் சரியான உணவுப் பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மருந்தாகப் பயன்படும் உணவுப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்.

கீரைகளை நீரில் நன்றாகக் கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்குக் காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்குத் தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியைத் தூண்டும். கீழாநெல்லியை சாப்பிட்டால் மஞ்சள்காமாலை நோய் மறையும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும்பால் தாதுக்கள் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப் பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த்தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாத நோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையைப் பெருக்கும். வெந்தயம் கசப்புச் சுவை உடையது. சீதக்காய்ச்சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவைத் தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் ஜவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியைத் தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவைக் குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியைக் குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்தரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி தேங்காய்க்கு உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 06:04:35 PM
இள நரையைப் போக்க வேண்டுமா....?


இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 06:08:53 PM
விழா காலங்களில் வயிறு உபாதைகளை தவிர்க்க...!


இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.


புதினா சாறு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, அஜீரணம் உடனே குணமாகும்.
 
எலுமிச்சை பழச்சாறை தண்­ணீரில் கலந்து, அந்த தண்­ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிய பின், சிறிதளவு பாலில் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து குடித்தால் வாயு கரைந்து தொல்லை நீங்கும்.

ஒரு டம்ளர் தண்­ணீரில் சிறிது கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஆறியபின் வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, நினைவுத்திறன் அதிகரிக்கும்.

பருக்களால் கஷ்டப்படுவோர், தினமும் இளநீரில் மஞ்சள்தூளைக் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேப்பிலை, கறிவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து, நிழலில் காய வைத்து பொடியாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.

திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தால் சிலருக்கு வயிற்றுக்குள் ஏடாகூடமாக இருக்கும். உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்பதற்கான அறிகுறிதான் அது. இதுபோன்று ஏற்படும் என்று நீங்கள் முன்கூட்டியே உணர்ந்தால், சாப்பிட்டு முடித்ததும் சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி கடித்து சாறை விழுங்கவும். அந்த ஏடாகூட வயிற்றுப் பிரச்சினை பறந்தே போய்விடும்.

இதுபோல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை நிறுத்தவும் சிறிய இஞ்சித் துண்டை சிறிது உப்புடன் சேர்த்து சாப்பிடவும். அப்படி சாப்பிட்டால் எப்படிபட்ட குமட்டலும் உடனே அமைதியாகிவிடும்.
 
சமையல் செய்யும்போது கொஞ்சம் கவனம் சிதறிவிட்டாலும், அடுப்பில் சூடாக இருக்கும் பாத்திரத்தில் கையை வைத்து சூடு வாங்கிக்கொள்ள நேரிடும். அப்படி சூடு வாங்கிக்கொண்டால், உடனே அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அப்படிச் செய்வதால் சூடு பட்ட இடத்தில் கொப்புளம் போன்ற பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 06:18:04 PM
மார்புச்சளிக்கு ஏலப்பொடி


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.chandrikamasala.com%2Fcatalog%2Fimages%2Fcardamom%2520powder.jpg&hash=ac40a4bdede1df9c36a22783c2d09dbb7a2a0d90)

தலை சுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக:

கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

தலைபாரம் குறைய:

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

மார்புச்சளி நீங்க:

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க:

ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

ஜலதோஷம் குணமாக:

முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

வாந்தி நிற்க:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

குமட்டல்:

கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 06:21:42 PM
நினைவாற்றலுக்கு....


ஞாபக சக்தி:

வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும். வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும். பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டால் மூளை பலம் பெறும். உடலுக்குப் பலம் கொடுக்கும்.

பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, மாதுளம்பழம் இவைகளை தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

காச நோய்க்கு மிளகு வைத்தியம்:

காசநோய் தீர மிளகு வைத்தியம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, தேள் கொடுக்கு இலை, பூ ஆகியவற்றை சிறிது சீரகம், 6 மிளகுடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஆட்டுப்பால் விட்டு குடிக்க வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 48 நாட்கள் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

இம்மருந்தை உண்ணும் போது புகைப்பிடித்தல், மது, காபி, டீ அருந்துதல் போன்றவைகளைத் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

மேக நோய்க்கும், நீரிழிவுக்கும் ஏற்றது:

மேக நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் புங்கம் பூவில் தயாரிக்கப்படும் மருந்து மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. அதாவது, புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதனை இடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த தூளை 1 அல்லது 2 கிராம் அளவு தேனில் கலந்து காலை, மாலை இருவேளையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும். இப்படி செய்தால் எவ்வளவு கடுமையான மேக நோயாக இருந்தாலும் குணமாகிவிடும்.

இந்த மருந்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 05, 2012, 06:27:08 PM
இரத்த சோகையா? கொய்யப்பழம் சாப்பிடுங்கள்!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmedia.lunch.com%2Fd%2Fd7%2F208124.jpg%3F2&hash=20cca6ae7ac6b8d8b019d2618287735aa432f9dc)

பித்தம் நீங்க:

மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:

முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.

அம்மை நோயைத் தடுக்க:

10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.

குஷ்டநோய் குணமாக:

வல்லாரை இலையை பொடி செய்து பரங்கி சக்கை தூளையும் கலந்து வைத்து காலை, மாலை, இரவு மூன்று வேளை வெண்ணெய்யுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குணமாகும்.

சர்க்கரை நோய்:

ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

யானைக்கால் நோய் குணமாக:

பசுவின் சிறுநீரும், மஞ்சள்தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் வராது.

கெட்டு போய் இருக்கும் ஈரலை குணப்படுத்த:

கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் வியாதி குணமாகும்.

மஞ்சள் காமாலை நோய் குணமாக:

தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.

பைத்தியம் குணமாக:

கீழாநெல்லி சமூலம், கடுக்காய் தோல், வேப்பம் பிசின் பசும்பால் விட்டு அரைத்து நல்லெண்ணை கூட்டி அடுப்பில் வைத்து சூடாக்கி இறக்கி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்துவர பைத்தியம் குணமாகும்.

பேதி குணமாக:

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் பேதி நிற்கும்.

இரத்தம் உறைதல் குணமாக:

நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

இரத்தம் விருத்தியாக:

செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.

இரத்த சோகையை போக்க:

தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும், பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட, ரத்தசோகை நீங்கும்.

உடல் வலி குணமாக:

வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

உடற் சூடு அகல:

கொத்து மல்லி விதைக் கஷாயத்தில் செந்துளசி சாற்றை சேர்த்து உட்கொண்டு வந்தால் அதிகரித்த உடற்சூடு சமநிலை அடையும்.

மந்தபுத்தி மாற:

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பை 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

மூளை நல்ல நிலையில் இயங்க:

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும்.

ஞாபக சக்தி அதிகரிக்க:

வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்கும். பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவைகளை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஞாபக சக்தி பெருகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 10:18:21 AM
ரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை!


ரத்த மூலத்திற்கு பிரண்டை:

பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.

இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:

பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.

அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.

பல் வலியைத் தீர்க்க:

பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.

அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.

பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.

கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.

பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 10:21:58 AM
மாங்காயின் மருத்துவக் குணங்கள்...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.nandyala.org%2Fmahanandi%2Fimages%2Frawmango%2Fmamidikayaimagecopyrighted1.jpg&hash=6287a68a42d2aa9b49a84d4ecb095fae31e5179a)

வாய்ப்புண்ணிலிருந்து விடுபட:

வாய், நாக்கு இவைகளில் புண் வந்தால் எந்த உணவையும் சாப்பிட முடியாது. பப்பாளி மரத்தின் பிஞ்சுக் காயை மேலே சீவி விட்டால் அதிலிருந்து கசியும் பாலைத் தொட்டு புண்ணின் மேல் காலை, மாலை தடவி வந்தால், மூன்று நாட்களுக்குள் வாய்ப்புண் ஆறிவிடும்.

பேன் தொல்லை தீர:

தேங்காய் எண்ணெயில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டு அதைத் தலைக்குத் தேய்த்துச் சிறிது நேரம் அப்படியே தலையில் ஊறவிட்டுப் பிறகு தலையை அலசிக் குளியுங்கள். பேன் ஒழிந்துவிடும்.

எலுமிச்சை இலைகளை நசுக்கி சாறெடுத்து தண்ணீருடன் கலந்து சிறிது உப்புப் போட்டுக் குடித்தால் பித்த வாந்தி நிற்கும்.

சிலருக்கு தலையில் நீர்க்கோர்த்து தலைவலி பாடாய்படுத்தும். ஒரு ஸ்பூன் காப்பி பொடியை கொதிக்கும் நீரில் போட்டு உடனே ஆவி பிடித்தால், பத்தே நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்.

மாங்காயின் மருத்துவப் பயன்கள்:

பசி எடுப்பதில்லை என்று அவதிப்படுபவர்கள் மாம்பிஞ்சை வெயிலில் காய வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துச் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள் பசியை.

நீரிழிவு நோயாளிகளுக்கு மாந்தளிரை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு கோப்பை வெந்நீரில் இரண்டு டீ ஸ்பூன் தூளைக் கலந்து கலக்கி, தினமும் இரண்டு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்.

மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டு தேள் கடி, தேனி கடிகளுக்குத் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும்.

வெயில் புண்ணால் ஏற்படும் அவதி:

கடும் வெயிலில் உடல் புண்ணாகி தகிக்கிறதா. வினிகரை வைத்து அதை விரட்டலாம். கடும் வெயில் நாடான இந்தியா போன்றவற்றில் வெயில் காலங்களில் வெயிலால் ஏற்படும் தீப்புண்கள் சகஜம்.

அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது வினிகரைத் தடவி வந்தால் புண் போய் புன்னகை தோன்றும் உங்கள் மேனியில்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 10:25:52 AM
மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fstatic.ddmcdn.com%2Fgif%2Fpotatoes-1.jpg&hash=cf9a51a8b99c29731d5e7ac849d860f7f55fac02)

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

மூட்டழற்சி:

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்குவாதம்:

இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டழற்சியின் அறிகுறிகள்:

நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதத்தின் அறிகுறிகள்:

இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 10:32:15 AM
மூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.medindia.net%2Falternativemedicine%2Fayurvedaanddiet%2Fjuices%2Fimages%2FTenderCoconut.jpg&hash=9c3c1b2a536b3f51043947fc774ab8d3ea3869aa)

ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க.... ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா... மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.

இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா... மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா.... 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும்.

வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.

சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன்சரைகூட குணமாக்கும். முக்கியமா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு நல்ல மருந்து இது.

அடுத்ததா, ஒரு கைகண்ட மருந்து குப்பைமேனி. இந்த செடியைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. சிலர் இதை ஒண்ணுக்கும் ஆகாத செடினு சொல்வாங்க. ஆனா, மூலத்துக்கு இது நல்ல மருந்து. குப்பைமேனி இலையை காய வச்சு நல்லா தூளாக்கி வச்சுக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.

அருகம்புல் 20 கிராம் அளவு எடுத்து, மை போல அரைச்சு, காய்ச்சின பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா... மூலம் மட்டுமில்லாம ரத்த சோகையும் குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 10:36:37 AM
காது வலிக்கு நல்ல மருந்து ஆலிவ் எண்ணை!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-f8KHOTTexEM%2FTWabeINgX7I%2FAAAAAAAAACU%2FoBfD04pTCWQ%2Fs1600%2Folive%2Boil1.jpg&hash=7b501924c024c8542fc3e192e86669d76e039b88)

பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.

அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரிந்தவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை.

தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...

வறட்டு இருமல்:

வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும்.

இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

தேனீ கொட்டிடுத்தா:

தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.

காது வலிக்கு:

அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே.

அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம்.

பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா:

பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது.

விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.

தலை முடி பிசுபிசுப்புக்கு:

பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம்.

சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:31:03 PM
கொம்பு மஞ்சள் மற்றும் மிளகு புகை.... தும்மலுக்கு பகை!


கொட்டும் பனிக்காலம். பொதுவா பனி காலத்துல சளி பிடிச்சிக்கிட்டா... தும்மல், இருமல், தலைபாரம்னு மண்டையை உண்டு இல்லைன்னு ஆக்கிரும். எனவே, பனிக்காலத்தில் வரும் சளித்தொல்லையை சமாளிக்க சில வழிகள்...

சளி, இருமலை விரட்ட:

தூதுவளை இலை பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. நிறைய வீடுகள்ல வளக்குறாங்க. வேலி ஓரங்கள்லயும் தானா வளரும். அதுல 10 இலைய பறிச்சிட்டு வந்து அதோட அரை ஸ்பூன் நல்லெண்ணெய்.... இல்லைனா, வெண்ணெயை விட்டு வதக்கி வெறும் வயித்துல வெறுமனே காலை நேரத்துல சாப்பிடணும். தொடர்ந்து மூணு நாள் சாப்பிட்டாலே சளியும் இருமலும் ஓடிப்போயிரும்.

கல்யாண முருங்கை இலை தெரியுமா? பெண்கள்ல பலபேருக்கு இது பழக்கமானது. கல்யாண முருங்கை இலையைப் பறிச்சிட்டு வந்து வதக்கி சாறு எடுக்கணும். அரை ஸ்பூன் அளவு சாறு எடுத்து அதோட அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடணும். நெஞ்சுச் சளி அப்படியே கரைஞ்சி போயிரும்.

கரிசலாங்கண்ணி கீரையை நிழல்ல நல்லா உலர்த்தி, பொடியாக்கணும். அதுல ஒரு சிட்டிகை எடுத்து அரை ஸ்பூன் தேன் சேர்த்து காலையில வெறும் வயித்துல ஒரு மண்டலம் சாப்பிட்டு பாருங்க... சளிப் பிரச்சனை துளிகூட இல்லாம போயிரும்.

தும்மல் விலக:

கொம்பு மஞ்சளை தீயில சுடணும். புகை வந்ததும் அதை மூக்கு வழியா சுவாசிச்சா... தும்மல், தலைபாரம் விலகும். நாலஞ்சு தடவை பண்ணிப் பார்த்தாலே குணம் தெரியும். மிளகை ஊசி முனையில குத்தி தீயில சுட்டா, புகை வரும். அதை மூக்கால சுவாசிச்சாலும் தலைபாரம், தும்மல் சரியாகும்.

தலைவலி, தலைபாரம் குணமாக:

சுக்கு தலைவலிக்கு கைகண்ட மருந்து. தாய்ப்பால்ல சுக்கை நல்லா இழைக்கணும். அதை நெத்தியில பத்து போட்டா தலைவலியும் தலைபாரமும் ஓடிப்போயிரும். தாய்ப்பால் கிடைக்கலைனா பச்சைத் தண்ணியிலேயும் இழைக்கலாம்.

கருஞ்செம்பை பூவுல ஒரு ஸ்பூன் எடுத்துக்கோங்க. அதோட சின்னத்துண்டு கஸ்தூரி மஞ்சள், கால் ஸ்பூன் சாம்பிராணி சேர்த்து 100 மில்லி நல்லெண்ணெயில போட்டு காய்ச்சுங்க. அதை பொறுக்குற சூட்டுல தலையில தேய்ச்சி அரைமணி நேரம் கழிச்சி குளிங்க. தலைவலி தலைபாரம் அதோட சேர்ந்த பிரச்சினை எல்லாம் ஓடிப்போயிரும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:35:02 PM
மருதாணியின் மகத்துவம்...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fthebest-healthy-foods.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F04%2Fhenna_plant.jpg&hash=9b1caf21c920189e1ebafaf17c2c28930a131867)

சொறி, சிரங்கு, அரிப்புனு சில பேர் படாத பாடு படுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு சில வைத்தியங்களைச் சொல்றேன் கேட்டுக்கோங்க.

இதைப் படிச்சு முடிச்சதும், "அட ஏற்கெனவே இதே நோய்களுக்கு வேற வேற வைத்தியம் சொல்லியிருந்தாங்களே"னு நினைக்கத் தோணும். அது ஒரு வகை வைத்தியம்... இது ஒரு வகை வைத்தியம். அவ்வளவுதான்.

பூவரசு மரம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த மரத்துல புல்லுருவினு ஒரு கொடி வளரும். அந்தக் கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்துக்கங்க. அதோட சின்னதா ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து மையா அரைச்சிக்கோங்க. எந்தெந்த இடத்துல ஊறல், சொறி, சிரங்கு இருக்கோ அங்கெல்லாம் அதைப் பூசணும். மூணு மணி நேரம் கழிச்சு குளிச்சிரலாம்.

பூவரசம் பூ இல்லைனா... பூவரசம் காய் எடுத்துக்கோங்க (ரெண்டையும் சேர்த்தும் அரைக்கலாம்). அதோட மஞ்சள் துண்டு சேர்த்து அரைச்சு, சிரங்கு உள்ள இடமெல்லாம் பூசிரணும். மூணு மணி நேரம் கழிச்சு, பாசிப்பயறு மாவு தேய்ச்சி குளிக்கணும்.

மேலே சொன்ன ரெண்டு வைத்தியத்தையும், ஒரு மண்டலத்துக்குக் கடைபிடிச்சா... நல்ல குணம் கிடைக்கும்.

கொன்றை மலர் கேள்விப்பட்டிருப்பீங்க. அதுல மயில் கொன்றைனு ஒரு வகை இருக்கு. அதோட இலையை கோலிக்குண்டு அளவு எடுத்து அரைச்சு பால்ல கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா... எந்த மாதிரி தோல் நோயும் விட்டேனா பாருன்னு ஓடிப்போயிரும் போங்க.

மழைக்காலத்துல தண்ணியில அங்க இங்கனு அலையுறதுனால கால் இடுக்குல சேத்துப்புண் வந்து படாதபாடுபடுத்தும். இதுக்கு கைகண்ட மருந்து இருக்கு. மருதாணி இலைய பறிச்சு கொஞ்சம் தண்ணி விட்டு மையா அரைச்சு சேத்துப்புண் உள்ள எடத்துல காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் பூசணும். சில மணி நேரம் கழிச்சு கழுவிரணும்.

இதேமாதிரி பீர்க்கன்கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்து கசக்கி, ஒரு ஸ்பூன்சாறு எடுத்து புளியங்கொட்டை அளவு கல் சுண்ணாம்புச் சேர்த்து சேத்துப்புண் உள்ள எடத்துல பூசணும்.

மேல சொன்ன ரெண்டு வைத்தியத்தையும் ரெண்டு மூணு நாள் செஞ்சாலே குணம் கிடைக்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:39:39 PM
மூளைச்சோர்வு நீங்க தேன்...!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages.wikia.com%2F39clues%2Fimages%2Fa%2Fa9%2FHoney_jar.jpg&hash=5078b44bfc17498a9f33bcd68220e059343cb76a)

வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.


வெங்காயம் ஓர் அருமருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்கூடிய நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கிருமிகள் செத்துப் போகும். பற்கள் எனாமல் சிதையாமல் இருக்கும்.

வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.

பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.

கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதியை போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டைப் புண்ணுக்குப் பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் முற்றிலும் குணமாகும்.

அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. சாப்பிட்டவுடனே பயனைக் காணலாம்.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் நூறு மில்லி தேங்காய் எண்ணெய்யை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் சொத்தை மறையும்.

நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து ஒரு சட்டியிலே போட்டு தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வரவேண்டும். வாய் வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.

வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.

கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். கறிவேப்பிலை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.

வயிற்றிலுள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் உண்டாகிறது. இந்தக் குடல் புண்தான் அல்சர் எனப்படுவது. இந்த அல்சர் குணமாக வேண்டுமானால் பச்சை வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வரவேண்டும். குடல்களில் பழுதுபட்ட மெலிசான சவ்வுத் தோல்களைச் சீக்கிரமாக வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடுகிறது பச்சை வாழைப்பழம்.

மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

புதினா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:43:01 PM
மன அழுத்தம் நீங்க...


வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.


ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.

வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும்.

விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.

மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

வாயுத் தொல்லையால் பொது இடங்களில் அவமானத்தைச் சந்திக்கிறவர்கள், கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.

குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம். இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். இப்படி மூன்று வேளை செய்தால், வாந்தி உடனே நிற்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:48:13 PM
நஞ்சு நீக்கும் கடுகு


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.anniesremedy.com%2Fimages%2Foils%2Fmustard_seed.jpg&hash=3689853d18c03a7f89def0354389cea660c3a30c)

கடுகில் இரண்டு வகை உண்டு.

1) கருங்கடுகு
2) வெண்கடுகு

இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

செரிமானத்தைத் தூண்ட

செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

இருமல் நீங்க

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

வயிற்றுவலி குணமாக

அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

நஞ்சு உண்டவர்களுக்கு

சிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.

சிறுநீர் பெருக்கி

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

விக்கல் நீங்க

வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:51:38 PM
சளித் தொல்லை நீங்க கற்பூரவள்ளி


சிலர் வீடுகளில் அழகுக்காக பல செடிகொடிகளை வளர்ப்பார்கள். அவற்றில் துளசி, கற்பூரவள்ளி, சித்தரத்தை, சிறியாநங்கை என பல அடங்கும். சிலருக்கு இவற்றின் மருத்துவக் குணங்கள் தெரிந்திருக்கும். சிலர் அறிந்திருக்க மாட்டார்கள்.


வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி பார்ப்போமா!

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.

கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

சளித் தொல்லை நீங்க

மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:54:35 PM
வயிற்று நோய்கள் நீங்க...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fculinarymasterclass.com%2Fimages%2Fmanuals%2Fnutmeg.jpg&hash=b8ff83666db1ebec5665d4b362af09be0107e7a6)

சர்க்கரையுடன் தேன் மெழுகு தடவிவர பால் பருக்கள் உதிர்ந்து விடும்.


அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலைபாரம், தலைவலி நீங்கும்.

இயற்கை அன்னை நமக்கு அளித்த அருமருந்தாக திப்பிலி, நெல்லிக்காய், கடுக்காய், கருவபட்டை, கிராம்பு, ஜாதிக்காய், ஆடாதோடா இலை, நெருஞ்சி, தாதிரிப்பூ போன்ற பல பொருட்கள் முக்கியமாக இடம் பெறுகின்றன.

திப்பிலி இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து, ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.

ஜாதிக்காயை தேனில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் வயிற்று நோய்கள் நீங்கும். ஜாதிக்காய் விதைகளை அரைத்து தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

தாதிரிப்பூவை தூளாக்கி நல்லெண்ணை கலந்து தேய்த்தால் தோல் நோய்கள் அண்டாது. பொடி செய்து தயிருடன் கலந்து குடித்து வந்தால் நன்கு ஜீரணம் ஆகும்.

கடுகு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டைப்புண் ஆறி விடும். தாமரைப்பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் படை, புள்ளிகள் நீங்கும். சருமம் ஜொலி ஜொலிக்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 06, 2012, 01:57:11 PM
கர்ப்பிணிகள் கவனத்திற்கு...


விஷம் நீங்க...

எதிர்பாராதவிதமாக தேளோ...தேனீயோ... பூரானோ கடித்து விட்டால் அந்த இடம் அதிகமாக வலிக்கும். சிலரால் அந்த வலியை தாங்க இயலாது, சிலருக்கு மயக்கமே வந்து விடும். இது போன்ற விஷக்கடிகளுக்கு எலுமிச்சம்பழத்தை நிவாரணியாக பயன்படுத்தலாம்.

ஒரு தேங்காயை உடைத்து, அதிலிருந்து பருப்பை எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாக மென்று தின்ன வேண்டும். ஓர் எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியால் விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். இது போல தேய்த்தால் சிறிது நேரத்தில் விஷம் இறங்கும். வலியும் நிற்கும்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு...

சில பெண்களுக்குக் கருத்தரித்து 5 மாதங்களுக்குப் பின், சாதாரன வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பின் குணமாகும். சில பெண்களுக்கு வயிற்றுப் போக்கு அதிகரித்து மலத்துடன் ரத்தம் கலந்து போக ஆரம்பிக்கும். அதன் பின்னர் ரத்தமாகவே வயிற்றுப் போக்கு ஏற்படும்.

இதை அலட்சியப்படுத்தாமல் அரை டம்ளர் அளவு வெந்நீரை எடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு, ஒரு தேக்கரண்டி அளவு சிற்றாமணக்கு எண்ணையை சேர்த்து, ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை போட்டு நன்றாக கலக்கிக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதுபோல மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த பேதி நின்றுவிடும். இதற்கு மேலும் தொடர்ந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது.

தோல் நோய்க்கு

முருங்கைக் கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம்.

தொண்டை இதமாக...

தொண்டை வலியா? அதற்கான அறிகுற’யா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 11:15:36 AM
வாய்ப்புண் குணமாக...


ரத்த காயம் குணமாக...

அடிபடுவதும் அலறுவதும் குழந்தைகள் உள்ள வீடுகளில் அன்றாடம் சகஜம்தான். ரத்தப் பெருக்கை உடனே தடுக்க, அடிபட்ட இடத்தில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவிப் பாருங்கள். ரத்தப்பெருக்கு நிற்கும். பிறகு டாக்டரிடம் காட்டச் செல்லலாம். நிறைய பேர் மண்ணைத் தூவுவார்கள். அது ஆபத்து.

பேன் தொல்லையா?

பள்ளிக்கூடம் போகும் சிறுமிகள் தலையில் பேன்கள் எப்போதும் ஸ்டாக் இருந்துகொண்டே இருக்கும். எந்த மருந்தைப் போட்டாலும் சுலபத்தில் சாகாத வரம் பெற்றவை இந்த பேன்கள் அதற்கான வைத்தியம். தலைமுடியின் அடர்த்திக்குக் தகுந்தவாறு 1 கப் அல்லது அரை கப் நல்லெண்ணெய் எடுத்து வாணலியில் ஊற்றி, புகை வரும்படி காய்ச்சுங்கள். அதில் ஒரு கைப்பிடி வேப்பம் பூவைப் போட்டுப் பொரிக்கவும். பொரித்த வேப்பம்பூவை அரித்தெடுத்து வைத்துக்கொண்டு, எண்ணெய் ஆறியதும் தலையின் அடிப்பாகம் வரையில் நன்கு தேய்த்து ஊறுவைத்து, பின் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். ஷாம்பு வேண்டாம். இதுபோல் வாரத்துக்கு இரண்டு முறை வீதம் ஒரு மாதம் போலத் தொடர்ந்து செய்தால் பேன் தொல்லை ஒழியும்.

இருமல் நீங்க....

கற்பூரவல்லி இலையின் சாற்றைச் சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்குத் திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

உடம்பு வலி குடைச்சல்!

சுக்கைத் தட்டிக் கஷாயம் வைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், இடுப்புப் பிடிப்பு - அதிலும் பெண்களின் வாயுப் பிடிப்பு நீங்கும். ஒரு நாளைக்கு 2 முறை வீதம் சாப்பிட்டால், மூன்று நாட்களில் பிரேக் டான்ஸ் ஆடுகிற அளவுக்கு இடுப்பு சொன்னபடி கேட்கும்!

பிடிப்புக்குப் பட்டை போடு!

முருங்கைப் பட்டை, உசிலம் பட்டை, வேப்பம் பட்டை மூன்றையும் சம அளவுக்கு எடுத்து இடித்து, பிடிப்புகளில் தடவி வந்தாலும் சீக்கிரத்தில் குணம் பெறலாம்.

வாய்வுக் குத்தலுக்கு ஒரு ரசம்

சாதாரணமாக நாம் வீட்டில் வைக்கும் ரசத்தைப் போல புளி, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வைத்து, அத்துடன் கடைந்த துவரம் பருப்பு நீர்க்க விடவும். ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் - இவைகளுடன் ஐந்தாறு கண்டந்திப்பிலி, நாலைந்து பூண்டுப் பல் சேர்த்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து, அரைத்து ரசத்தில் சேர்த்துக் கொதி வரும்போது இறக்கி கடுகு தாளிக்கவும். கொத்துமல்லியைக் கிள்ளிப் போடவும். இந்த ரசத்தை வெறும் வயிற்றில் - அதாவது, சாப்பிட உட்கார்ந்ததும் நேரடியாக ரசம் சாதத்துக்குப் பாய்ந்துவிட வேண்டும். மோர் வேண்டாம்.எண்ணெய் ஸ்நானத்துக்குப் பிறகு இந்த ரசத்தை ஒரு பிடி பிடித்தால் வாயுப் பிடிப்பாவது ஒன்றாவது! உடம்பு அமர்க்களமாக இருக்கும்!

வலிக்கு "ஐஸ்" வையுங்கள்

பல சமயங்களில் ஏதாவது கனமான பொருட்களைக் காலில் போட்டுக் கொள்வோம். அல்லது, எங்காவது இடித்து ரத்தம் கட்டிக்கொள்ளும். இதுபோன்ற சமயங்களில் வலியுள்ள பாகத்துக்கு ஐஸ் ஒத்தடம் போல வேறெதுவும் சுகம் தராது. வெதுவெதுப்பான நீரில் நீலகிரித் தைலம் போட்டும் வலியுள்ள இடத்தில் மெதுவாக ஊற்றலாம்.

வாய்ப்புண் நீங்க....

குன்றுமணி இலையின் சாற்றை எடுத்து வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். தொடர்ந்து இரண்டு நாட்களுக்குத் தடவி வரவேண்டும்.
இலந்தை மர இலையைப் பறித்துக் கஷாயம் வைத்து, அதில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் மறையும். வசம்பு, சித்தரத்தை - இவைகளைப் பொடி செய்து வைத்துக் கொண்டு, வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தாலும் நல்ல பலன் தரும். வெற்றிலையில் சுண்ணாம்பு தடவும்போது அதிகமாகிவிட்டாலும் வாய் வெந்துவிடும். இதற்கு சுத்த காம்பு (நாட்டுமருந்துக் கடையில் சகஜமாகக் கிடைக்கும்) ஒன்றை எடுத்துக் கடித்து, சாற்றை வாய் முழுவதும் பரவச் செய்தாலும் புண் உடனே ஆறிவிடும்.

பற்கறை நீங்க

டேபிள் சால்ட்டுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பற்களில் தேய்த்துக் கழுவினால் பற்கள் பளிச்சிடும்.

பளபள பற்கள்...

சுக்கு - 50 கிராம், கருவேலம் பட்டை - 25 கிராம், கடுக்காய் தோல் - 25 கிராம், களிப் பாக்கு - 25 கிராம், டேபிள் சால்ட் - 25 எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கைத் தோல் நீக்கிக் கொள்ளுங்கள். பாக்கை இடித்து, வறுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் மிக்ஸியில் போட்டுச் சன்னமாகப் பொடி செய்து கொள்ளுங்கள். அதில் டேபிள் சால்ட்டையும் போட்டுக் கலந்து, ஒரு மண்சட்டியில் போட்டு, துணியால் வேடுகட்டி, (ஒரு மெல்லிய சுத்தமான துணியால் மூடி) 2 மணி நேரம் வெயிலில் வைத்து, பின் ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இத்துடன் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால், வாயில் உள்ள துர்நாற்றம் போய்... வாய் மணக்கும்!

ஈறுகள் பலமாக ரோஜாப்பூ....

நல்ல பன்னீர் ரோஜாப்பூவுடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கொதிக்க வைத்து, அந்த நீரினால் தொடர்ந்து வாய் கொப்பளித்து வந்தால், ஈறுகள் வலுப்படும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 11:18:27 AM
மூளையின் ஆற்றல் அதிக்க...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.telegraph.co.uk%2Fmultimedia%2Farchive%2F01562%2Fbananas_1562879c.jpg&hash=c1c38ce33f068b7e04ceb8e936b7998e2680f8f3)

வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி, ஜூஸாக்கி, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக் கல், சிறுநீர் பாதையில் கிருமித் தொற்று ஆகியவை நீங்கும். உடலில் தேங்கியிருக்கும் கெட்டநீர் சிறுநீர் மூலம் வெளியேறும். சிறுநீர் பிரிவது எளிதாகும்.

உடம்பில் கை, கால் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் அல்லது உடலில் எரிச்சல் என்று இருந்தால் கவலை வெண்டாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகும். தீராத வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு கனிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டால் குணமாகும்.

உடலில் சிலருக்கு சிலந்தி போன்ற கட்டிகள் ஏற்படும். இந்த கட்டிகள் மீது வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து பூசி வந்தால் கட்டிகள் சீக்கிரமே பழுத்து சீழ் வெளியாகி குணமாகும். கரப்பான் நோய்க்கு வாழைப்பழத் தோலை நெருப்பினில் எரித்து சாம்பலாக்கி, அதை கடுகு எண்ணை கலந்து கரப்பான் மீது பூசினால் குணமாகும்.

மூலம் மற்றும் பவுத்திரம் ஆகிய சிக்கல்களால் சிக்கித் தவிப்போர், நன்றாக பழுத்த வாழைப் பழத்தை பாலில் போட்டு வேகவைத்து, மசித்து, காலை, மாலை சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். திராட்சை சாறு, தேன், வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் கட்டுப்படும்.

வாழை பிஞ்சுகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, காலை, மாலை சாப்பிட்டு வந்தால் குடல்புண், இரைப்பை புண் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சினைகள் நீங்கும். அதேபோல், வாழைப்பழத்தை தேனில் ஊறவைத்து, அதனுடன் 2 பேரீச்சம் பழத்தை சேர்த்து, பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் ஆறிவிடும்.

ரொம்பவும் கனியாத வாழைப் பழத்தை எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை ஏல அரிசித் தூளை தொட்டுச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அதேபோல், வாழைப் பழத்துடன் சிறிது உப்பும், புளியும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி மற்றும் ரத்தபேதி நீங்கும்.

மாதவிடாய் நிற்கும் காலங்களில், கருப்பை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் போது, கருச்சிதைவு, கரு கலைதல் ஆகிய பிரச்சினைகளால் அவஸ்தைப் படும் பெண்கள், வாழைப்பூவின் மேலே உள்ள முதிர்ந்த இலைகளை நீக்கிவிட்டு, மொட்டு போல் இருக்கும் பகுதியை ஜூஸாக்கி கற்கண்டு சேர்த்து, காலையிலும், மாலையிலும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கனிந்தும் கனியாமல் அரை குறையாக இருக்கும் வாழைப் பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி, அதனுடன் பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி போடவும். இவற்றுடன் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம் ஆகியவை நீங்கும். மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

சில குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும். குடல் புழுக்களை ஒழிக்க எலுமிச்சம் பழ சாறுடன், வாழைப் பழம் (Banana), பப்பாளி பழம் ஆகியவற்றை சேர்த்து கலவையாக்கி கொள்ளவும். அத்துடன் ஆரஞ்சுத் தோல், மாதுளம் பழத்தோல் இவற்றை கலந்து பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் புழுக்கள் நீங்கி குடல் சுத்தமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 11:21:42 AM
கிருமி நாசினியாக துளசி


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.herbcu.com%2Fherbs%2FTulsi.jpg&hash=30ad444d965e6da99583ae0a73d79338aba9e727)

துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.

அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்.

எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக:

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம் வரப்போகிறது. வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா? துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 11:27:02 AM
கிருமிகளை அழிக்கும் பலா!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.seriouseats.com%2Fimages%2F20080818jackfruit.jpg&hash=6bcb3056d5306100d5a56ddac3b41cfff6157da7)

முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்-படுத்தப்-பட்டு வருகிறது. பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது.

பலாவின் தாவரவியல் பெயர்: "ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்" (Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது.

தமிழில் வேறு பெயர்கள்: பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு பெயர்களும் உள்ளன.

பல்மொழிப் பெயர்கள்: ஆங்கிலத்தில் "ஜாக் ஃபுரூட்" (Jack fruit) என்று பெயர். இந்தியில் பனஸ், மலையாளத்தில் சக்கே, தெலுங்கில் பனஸபண்டு, கன்னடத்தில் பேரளே, குஜராத்தியில் பனஸி, காஷ்மீரியில் பனஸ்சு என்று பெயர்.

சத்துப் பொருட்கள்: நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில் உள்ள சத்துப் பொருட்களின் அளவு கீழ்கண்டவாறு உள்ளன. புரதம் 2.1 கிராம், கொழுப்பு 0.2 கிராம், மாவுப்பொருள் 19.8 கிராம், நார்ப்பொருள் 1.4 கிராம், சுண்ணாம்பு சத்து 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 41 மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7 மில்லிகிராம், தயாமின் 0.04 மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15 மி.கிராம், நியாசின் 0.4 மி.கிராம் வைட்டமின் "சி" 7.1மி. கிராம், மெக்னீசியம் 27 மில்லிகிராம், பொட்டாசியம் 19.1 மில்லிகிராம், சோடியம் 41.0 மில்லிகிராம், தாமிரம் 0.23 மில்லிகிராம், குளோரின் 9.1 மில்லிகிராம், கந்தகம் 69.2 மில்லிகிராம், கரோட்டின் 306 மைக்ரோகிராம். இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, "சத்துப்பேழை" என்று சிறப்பாகச் சொல்லலாம்.

எப்படிச் சாப்பிடலாம்: கொட்டையை நீக்கிவிட்டு, பலாச்சுளைகளை அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம். பலாக்கூழ், பலாப்பழ கீர், பலாப்பழ ஜாம், பலாப்பழ ஜெல்லி முதலியன செய்தும் சாப்பிடலாம். பலாப்பழத்தை பயன்படுத்தி பலவகை இனிப்புப் பண்டங்கள் தயார் செய்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு: பலாப் பழச்சுளையை அப்படியே தின்னும்போது, முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியதைத் தெரிந்து கொள்வோம். பலாப் பழத்திலுள்ள சில கேடு பயக்கும் தன்மையை நீக்கி, பழத்தின் முழு சத்துப் பொருட்களும் கிடைக்க, பலாச்சுளையுடன் சிறிது வெல்லம், கருப்பட்டி, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. இது எளிய வழிமுறைதான்.

மருத்துவப் பயன்கள்:

* பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

* சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

* பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சீராகச் சாப்பிட வேண்டும்.

* உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.

* எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

* பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.

* உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.

* தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.

* பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.

* பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

* பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.

* பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.

எச்சரிக்கை:

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது. வெறும் பலாப்பழத்தை அதிகம் தின்றால் அஜீரணம் ஏற்படும். ஆஸ்துமா நோயை அதிகரிக்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 11:31:05 AM
தலைவலி குணமாக...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fstatic.guim.co.uk%2Fsys-images%2FGuardian%2FPix%2Fpictures%2F2008%2F11%2F12%2F1226501691692%2Fchillies.jpg&hash=0cb25fddf922d90dedf2f259faa82b42f9ed5da5)

சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை. பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.


வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea.

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 11:39:47 AM
கல்லீரல் நோயை குணமாக்கும்...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ft2.gstatic.com%2Fimages%3Fq%3Dtbn%3AANd9GcRN2ZOPTvIvYyp0cblph3g147vTdNHyWWGiE8DFnTer1fQO6t2u3kBbf98fgA&hash=78355e9edeee6a40d5d371c5f2613101e42561d3)

ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். "இலைமறைவு காய்மறைவு" என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.


சரித்திரம்: வெப்பப்பிரதேச காய். தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம் என்கிறார்கள். அமேசான் காடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளும் பாகற்காய் வளர சிறந்த இடங்களாகும். ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு இது.

சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சாப்பிட்டு வந்தனர். முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. வறட்சி காலத்தில் வேறு உணவு கிடைக்காதபோது இதை உண்டனர். கி.பி 1400-ல் சீனர்கள் இதைப்பற்றி எழுதியுள்ளனர். முதலில் முட்டை அளவு இருந்தது. 200 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் 6 லிருந்து 8 இஞ்ச் நீளமுள்ள பாகற்காயை சாகுபடி செய்தனர். இப்போதெல்லாம் ஒரு அடி நீளத்திலும் வளர்கிறது.

வகைகள்: பாகற்காய் பழ வகையைச் சார்ந்தது. வெள்ளரி குடும்பம். பிட்டர் கார்ட், பிட்டர் மெலன், பால்சம் பியர், பால்சம் ஆப்பிள் என்று பல வகைகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் பாகற்காயை பிட்டர் கார்ட் (Bitter Gourd) என்கிறோம். பாகற்காயின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது.

இலையும் கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும். பிஞ்சு பச்சைக் கலரில் இருக்கும். முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். இதன் எல்லா பாகங்களுமே கசப்புதான். ஊறுகாய்க்குச் சிறந்தது. செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவத்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இதன் இலைகளை மேலை நாடுகளில் தேநீர், பீர் தயாரிக்கவும் சூப் மேல் தூவவும் பயன்படுத்துகிறார்கள்.

எப்படி வாங்குவது?: பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாக வாங்குங்கள்.

பாதுகாப்பது: பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் நல்லது.

சமைப்பது: பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6ம், கொழுப்பு 0.2ம், இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8ம், பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8ம், கார்போஹைட்ரேட் 4.2ம், சிறிதளவு விட்டமின் சி.

மருத்துவ குணங்கள்:

இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.

இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

பாகற்காயின் கசப்பு வி"ஷ"ம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக்கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.

இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குக்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் வி"ஷ"ம் சுரம் நின்று விடும்.

பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் வி"ஷ"ம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த வி"ஷ"ம் நீங்கும்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெளியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

பாக்டீரியா, டயாபடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜூரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.

பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

சர்க்கரை நோய்: 1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸீடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.

மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸீடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

கல்லீரல் பிரச்னை: 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

மூலநோய்: தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸீடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

சமையல்: இறால் பிட்டர் கார்ட் ஃப்ரை தேவை: பாகற்காய் 2, ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த இறால், 2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2 ஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் சர்க்கரை, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: பாகற்காயில் விதைகளை நீக்கவும். காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு தடவி அரை மணி நேரம் விடவும். பின்பு தண்ணீர் விட்டு கழுவவும். காயின் கசப்பு நீங்கிவிடும். தண்ணீரை வடித்து விடவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம். பூண்டு போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் பாகற்காய், மிளகாய்த்தூள், சர்க்கரை, காய்ந்த இறால், மஞ்சள் தூள் போட்டு காய் மிருதுவாகும்வரை வதக்கவும். தேவைப்படி உப்பு போட்டுக் கொள்ளவும். இறாலுக்கு பதில் மீன் பயன்படுத்தியும் செய்யலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 11:42:17 AM
கல்லீரல் கோளாறு குணமாக...


* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.


* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்துவர, நல்ல பலன் கிடைக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகிவர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* சிறிது தனியாவுடன், சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால், அதிகம் மது உண்ட போதை தணியும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:18:22 PM
தேகத்தை பளபளப்பாக்க...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dazzleyellowpages.com%2FResource-Guide%2F200604%2F%2FCUMIN.jpg&hash=a2c7b1b782f83ff47f2b6a3b93c4475be3875f20)

தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


பன்மொழிப் பெயர்கள்: சீரகத்திற்கு ஆங்கிலத்தில் "குமின்" (Cumin) என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, கார்மீரியில் ஜையுர் என்று பெயர்.

பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் என்பதால், இதற்கு தமிழில் "சீரகம்" என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீரூஅகம்-சீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.

சத்துப் பொருட்கள்: நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம் 2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து 48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரைபோஃபிளேவின் 0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக் அமிலம் 17.2 மில்லிகிராம், வைட்டமின் ஏ 175 ஐ.யு.

பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிறது. சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது. மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் எளியமருந்து. வயிற்றுப் பொருமல், உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள்: சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக்கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையதும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம்(Cumin), இஞ்சி(Ginger), சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு(Dry Ginger) , சீரகம், மிளகு(Pepper), திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:25:51 PM
இருமல் குணமாக வெந்தயக்கீரை...


நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.


கொத்தமல்லி கீரை(Coriander): மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வல்லாரை(Centella asiatica): நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை(Fenugreek): சாப்பிட்டால் இருமல் குணமாகும்

புதினா கீரை(Mint): மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:29:05 PM
தங்கச்சத்தைப் பெற....


பொன்னாங்காணிக்கீரை

தங்கச்சத்தைச் சிறப்பாகக் கொண்டது. பொன்னாங்காணிக்கீரையில் தங்கச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமாக இருப்பதாலும், சுண்ணாம்புச்சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாலும் இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது.

பொன்னாங்காணிக்கீரை சமைத்துச் சாப்பிடுவதால், உடல் பலம் கூடும். தோல் நோய்கள் வராது. கண் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். பார்வை தெளிவடையும். நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களும் மூலநோய் உள்ளவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால், குணம் பெறலாம்.

பொன்னாங்காணிக்கீரையை உப்பு சேர்க்காமல் வேகவைத்து வெண்ணெய் சேர்த்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். காட்டராக்ட் நோய் வராமல் பாதுகாக்கும். கண் சம்பந்தமான இதரப் பிணிகள் அனைத்தும் நீங்கி பார்வை தெளிவடையும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிக்கீரையை துவரம் பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உடம்பு பெருக்கும். பொன்னாங்காணிக் கீரையில் துவரம் பருப்பு சேர்த்துச் சமைத்து நெய் சேர்க்காமல் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூன்று மாதங்களில் தேவையற்ற உடல் பருமன் குறையும்.

இக்கீரையில் பூண்டும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் மூல வியாதி முற்றிலும் குணமாகும். மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிச்சாறு 30 மில்லியளவு தயாரித்து, பசும்பாலில் கலக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பொன்னாங்காணிச்சாற்றைக் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பொற்றிலைக்கரிப்பான்

பொற்றிலைக்கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச்சத்து அதிகம் உள்ளது. இக்கீரையைச் சாப்பிட்டால் உடல் பொன் நிறமாகும். உடலை எந்த நோயும் தாக்காது. கண்கள் ஒளி பெறும். பார்வை கூர்மை பெறும். புத்தி தெளிவடையும். குன்மக் கட்டிகள் நீங்கிவிடும். பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையை பச்சையாகத் தின்றால் மிகுந்த நன்மை கிடைக்கும். பச்சடியாகவும், கூட்டுக்கறியாகவும் தயாரித்துச் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூளைக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.

சித்தப்பிரமைக்கு மிக நல்ல மருந்து. கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும் நிவர்த்தியாகும். கபம் தொடர்பான சளி, இருமல் நீங்கும். ரத்த சோகை நோய் நிவர்த்தியாகி, நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும். மஞ்சள்காமாலை நோயை முழுமையாக நீக்கிவிடும் மிக அற்புதமான மருந்தாகும். கல்லீரல், மண்ணீரல் நோய் வந்தால் இம்மூலிகை மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ரத்த விருத்திக்குச் சிறப்பான மூலிகையாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து, நிழலில் நன்றாகக் காய வைத்துப் பொடி செய்துகொண்டு பொடியின் எடைக்குப் பாதி எடை, சீனி சேர்த்துக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை ஆகாரத்துக்கு முன்னதாக ஒரு தேக்கரண்டி பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சோகை, காமாலை, பாண்டு, வீக்கம், மூலம், மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரை இலையைச் சுத்தம் செய்து, நிழலில் சிறிது உலர்த்தி மெழுகுபதமாக அரைத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்து, சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் போட்டு, மாத்திரை மூழ்கும் அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து தினங்கள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துக்கொண்டு, சிறியோர் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால், சோகை, காமாலை, பாண்டு வீக்கம், குன்மக்கட்டி, கண், சீதபேதி, அதிசாரம், மாந்தக்கழிச்சல் குணமாகும். ரத்தவிருத்தி ஏற்பட்டு, உடல் தங்கநிறம் அடையும்.

ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மூர்ச்சை, மயக்கம், நரம்பின் அதிர்ச்சிகள், தூக்கமின்மை, புலம்புதல் போன்ற நிலையில் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு மாத்திரை வீதம் தினசரி சாப்பிட்டு வந்தால், ஹிஸ்டீரியாவின் தொடர்புடைய அனைத்து நோய்க்குறிகளும் குணமாகும்.

கரிசலாங்கண்ணி நெய்

பொற்றிலைக் கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு பங்கும், பசு நெய் ஒரு பங்கும் சேர்த்துக் காய்ச்சி வண்டல் மெழுகுபதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப கற்கண்டு சேர்த்து காலை ஆகாரத்துக்கு முன்பும், இரவு படுக்கும்போதும் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. மூலரோகம், கண் ரோகங்கள், உஷ்ண ரோகங்கள், இருமல் அனைத்தும் நிவர்த்தியாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:35:54 PM
இருதய நோய் குணமாக...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Flipstiq.com%2Fwp-content%2Fuploads%2F2010%2F06%2FHibiscus_rosa-sinensis.jpg&hash=e5805ed01350e03675bd1fdd1b7387eda317cf31)

செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும்.

செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும்.

ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி 500 மில்லியாக வந்ததும் வடிகட்டி இதில் ஒரு கிலோ சீனி சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி பால் அல்லது வெந்நீரில் கலந்து 4-50 தினங்கள் கொடுத்தால், குழந்தைகளின் கணைச்சூடு நிரந்தரமாகக் குணமாகும். நவீன மருத்துவத்தில் கணைச்சூட்டை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது. சயரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சர்பத்தைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டால் சயரோகம் முழுமையாக நிவர்த்தியாகும்.  கல்லீரல், இருதய நோய்கள் குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் வெந்நீர் இரண்டு டம்ளர் விட்டு, மூடிவைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் சென்றபின் எடுத்து வடிகட்டி பால், சர்க்கரை தேவைக்குச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் உபயோகித்து வந்தால், கணைச்சூடு நீங்கும். கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். ரத்தசோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயல்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும். வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்க பூக்களைச் சேகரித்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் எடுத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன், மூன்று தினங்கள் சாப்பிட்டால் குணமாகும்.

செம்பருத்திப்பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளைச் சேகரித்து, இதில் உள்ள மகரந்தப் பொடியை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியைப் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். ஆண் தன்மை அதிக வலிமை பெறும்.

செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக ஊறும்படி வைத்திருக்கவேண்டும். நன்றாக ஊறியபின் இந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் உடனே நிவர்த்தியாகும்.

செம்பருத்திப்பூ இதழ்களைச் சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்து, ஒரு கிலோ அளவிற்கு ஒரு ஜாடியில் போட்டு, இதில் கால் கிலோ தேன் சேர்த்து 5 கிராம் ஏலப்பொடியையும் இதில் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவேண்டும். பத்து தினங்கள் ஊறியபின் ஒருநாள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துப் பயன்படுத்தவேண்டும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, எலும்புருக்கி, கல்லீரல் வீக்கம், மேகக் காங்கை, இருதய பலவீனம் நீங்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:42:43 PM
வறட்டு இருமல்.....


நரையைப் போக்க!

கரிசாலை இலைச்சாற்றை நல்லெண்னை அல்லது தேங்காய் எண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வர, முடி கறுத்துத் தழைத்து வளரும்.

இருமலுக்கு முற்றுப்புள்ளி!

கற்பூரவல்லி இலைச்சாருடன் கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க, இருமல் மாயமாகும்.

உதட்டில் புண்ணா?

பாக்கின் வேரை குடிநீரிலிட்டு வாய் கொப்பளித்துவர உதட்டுப்புண் ஈற்றுப்புண் தீரும்.

பல் கெட்டிப்பட!

பாக்கு கொட்டையைச் சுட்டு சாம்பலாக்கி சம அளவு காசுக்கட்டியும், லவங்கமும் பொடிசெய்து கூட்டிப்பல் துலக்கிவர பல் கெட்டிப்படும்.

வெள்ளைப்படுதலுக்கு குட்-பை!

கற்கடகச்சிங்கியை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு நீர் அருந்தினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வறட்டு இருமல் போயே போச்சு!

சுக்கு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், கற்கடகச்சிங்கி, முழக்காம்பிசின் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துப் பொடித்து 2 கிராம் எடைவீதம் தேனுடன் சேர்த்து கொடுக்க... வறட்டு இருமல் குணமாகும்.

வயிற்றுப்புழுவை ஒழிக்க!

கப்பைக் கிழங்கின் மாவு 130 மி.கிராம் முதல் 260 மி.கிராம் எடை வரை சாப்பிட, வயிறில் உண்டாகும் புழுக்கள் சாகும்.

தாய்ப்பால் அதிகரிக்க!

கலியான முருங்கை இலையை தேங்காய் எண்ணையில் சமைத்துச் சாப்பிட்டால், தாய்மார்களுக்கு பால் அதிகமாய் சுரக்கும். குழந்தைக்கு புட்டிப்பாலே தேவை இருக்காது.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:46:23 PM
வாயு தொல்லை நீங்க...


தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாயு தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

வாய் நாற்றம்: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

குடல்புண்: மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

உதட்டு வெடிப்பு: கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:50:19 PM
சிறுநீரகங்களை பலப்படுத்தும் புதினா!


கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும் வைட்டமீன்கள் அதிகம். சத்து அதிகம் மிக்க சில கீரை வகைகளைப் பார்ப்போம்.


அகத்திக்கீரை:

அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும். அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம். அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

அரைக்கீரை:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை அரைக்கீரையாகும். காய்ச்சலால் எற்படும் உடல் நடுக்கம், கபரோகம், வாதநோய் ஆகிய நோய்களை அரைக்கீரை சரி செய்கிறது. ரத்தத்தை விருத்தி செய்து சோர்வைப்போக்கி உடல்நலத்தை சீராக்கும். தாது விருத்தியைத் தந்து உடலின் சக்தியைப் பெருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சிறுகீரை:

பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும். காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

தூதுவளைக்கீரை:

தூதுவளை இலை முட்களுடன் இருக்கும். அவைகளில் உள்ள முட்களை நீக்கி உபயோகிக்க வேண்டும். இதைப்பச்சடியில் சேர்க்கலாம். கூட்டாகவும் வைக்கலாம். துவையல் செய்தும் சாப்பிடலாம். விந்து நஷ்டம், மேலிழைப்பு, காசநோய், காதுமந்தம் ஆகியவற்றுக்கு தூதுவளை கை கண்ட மருந்து.

புதினாக்கீரை:

சிறுநீரகங்களை பலப்படுத்தக்கூடிய கீரை புதினாக்கீரை. புதினாக்கீரையை துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட, பசி எடுத்து சாதம் அதிக அளவில் உள்ளே போகும்.

புளிச்சகீரை:

நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும் கீரை புளிச்சகீரை. புளிப்பு ருசியுடைய இந்தக்கீரைக்கு சுக்காங் கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத் தரும். போகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரி செய்யும். பெண்களுக்கு வரும் மார்புப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு.

பொன்னாங்கண்ணிக் கீரை:

உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர, கண்களைப்பற்றிய ரோகம் நீங்கும். உஷ்ணமண்டல ரோகம், தேகச்சூடு, மூலரோகம் போகும்.

மணத்தக்காளிக்கீரை:

நாவில் உள்ள புண் நீங்கும். உடலின் உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் சக்தி இந்தக்கீரைக்கு உண்டு.

முருங்கைக்கீரை:

அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

முளைக்கீரை:

ரத்த அழுத்த நோய்க்கு முளைக்கீரை சாப்பிடுவது நல்லது.

முடக்கத்தான் கீரை:

இருமலுக்கு அருமருந்து. வல்லாரைக்கீரை மூளைத் திறனைப் பெருக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போக்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 04:53:33 PM
உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.akshayapatram.com%2Fwp%2Fwp-content%2Fuploads%2F2010%2F04%2Fridge%2Bgourd.jpg&hash=f52269762b7913300b90a5c25ce7a7400f164a9b)


சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 05:59:28 PM
உடல் சூடு தணிய பரங்கிக்காய்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fus.123rf.com%2F400wm%2F400%2F400%2Fzloneg%2Fzloneg0810%2Fzloneg081000024%2F3720755-nice-decorative-yellow-pumpkin-with-green-stripes-isolated-over-white-with-clipping-path.jpg&hash=c5b36b3498788badf3abd787ae8c1fcfccde64e2)

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.


ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்டாம்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 06:01:44 PM
வேனல்கட்டிகள் நீங்க...

வேனல்கட்டிகள் இருந்தால் அதன்மேல் வெள்ளைச் சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவுங்கள். மிக நல்ல நிவாரணம் தெரியும்.


வேனல் கட்டிகளுக்கு மஞ்ஜிஷ்டா (manjishta) அற்புதமான மருந்து. இதனுடன் ஏலக்காய் இரண்டைக் கலந்து கட்டிகளின் மேல் பற்றுப் போட்டால் நாலைந்து நாட்களில் சரியாகி விடும்.

ஜீரண சக்திக்கு:-

சுண்டைக்காயில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன. உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்டை வற்றலை வறுத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 06:03:18 PM
அல்சர் குணமாக...

அருகம்புல்லைக் காயவைத்து பொடி செய்து மோரில் கலக்கி தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

வில்வப்பழத்தின் சதைப் பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.

வாழைத் தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு, ஆகியவை வெளியேறும்.

கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆராக்கியமாக இருக்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 06:05:09 PM
வாதத்தைத் தணிக்க....


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.foodsubs.com%2FPhotos%2Fpinipig.jpg&hash=667bc4d81c095a0bc8a5b4453dbe44095ecfa15c)

ரத்த சோகை உள்ள, எப்போதும் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்பவர்களுக்கு பலம் தரும் உணவு - வெல்லம்! இவர்கள் பால், டீ, வேறு இனிப்புகள் சாப்பிடும்போது அதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை விட வெல்லத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம். அதிலும் ஒரு வருடம் பழசான வெல்லம் கூடுதல் பலம் தரும்.

அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.

சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.

மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.

வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 06:07:13 PM
நல்ல பசி எடுக்க...

ஒரு கைபிடி கருவேப்பிலையை எடுத்து மைபோல் அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கி வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர நல்ல பசி எடுக்கும்.

விளக்கெண்ணையையும், சுண்ணாம்பையும் சேர்ந்து குழப்பி இரும்பு கரண்டியிலிட்டு அடுப்பில் காயச்சி மிதமான சூட்டில் வெளிப்புறம் தடவினால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு நீங்கும்.

பித்தம் போன்ற நோயினால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சப்பழ இலையை காயவைத்து அதனுடன் மிளகாய், உப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு எண்ணெயில் வறுத்து, பொடி செய்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.

லேசான இரும்புக்காயம் பட்டவர்கள் வரமிளகாயை அரைத்து வேப்பெண்ணெய் சேர்த்து வதக்கி சூடான நிலையில் காயம்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்து, பின் சிறு அளவு மிளகாயை அதிலேயே வைத்து கட்ட வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தால் காயம் ஆறும்.

மூக்கினுள் என்ன காரணத்தால் ரத்தம் வடிய நேர்ந்தாலும், படிகாரத்தைத் தூள் செய்து, தண்ணீரில் கரைத்து மூக்கின் உள்ளும், புறமும் நன்றாகத் தடவினால் ரத்தக் கசிவு நின்றுவிடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 07, 2012, 06:08:35 PM
அல்சரை தவிர்க்க...

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 12:06:27 PM
நெஞ்சு எரிச்சல் குணமாக

நெஞ்சு எரிச்சல் குணமாக, சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து சுண்டைக் காயளவு உருட்டி தினசரி சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

பித்தத்தை போக்க:-

கருவேப்பிலையை துவையல் செய்து சாப்பிட்டால் பித்தத்தை போக்கும். இந்தத் துவையல் இளநரையையும் முடி உதிர்வதையும் தடுக்கும்.

மூக்கு அடைப்பு நீங்க:-

சளி பிடித்திருக்கும் நேரத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் வெங்காயத்தை சாறு பிழிந்து ஒவ்வொரு சொட்டு விட்டால் மூக்கடைப்பு சரியாகிவிடும்.

வயிற்றுவலி நீங்க:-

வயிற்றுவலி திடீரென ஏற்படுமாயின் இரண்டு, மூன்று வெள்ளைப்பூண்டு பற்களை நன்றாக மென்று விழுங்கினால் வயிற்றுவலி குறையும்.

சுத்தமான ஆரோக்கியமான நீரைப் பெற...

தண்ணீரைக் காய்ச்சி பருகுவதே ஆரோக்கியம். அப்படி செய்ய இயலாத நேரத்தில் குடிநீர் பானையில் உள்ள தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து நன்றாகக் கலக்கி, சிறிது நேரம் வைத்திருக்கவும். தண்ணீர் நன்றாகத் தெளிந்ததும் பருக பயன்படுத்தலாம். வண்டல், கிருமிகள் அடியில் தங்கிவிடும். செலவின்றி சுத்தீகரிக்கப்பட்ட குடி தண்ணீர் இது.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 12:10:00 PM
பெருங்காயம்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.foodsubs.com%2FPhotos%2Fasafoetida5.jpg&hash=ec4e732243e08ecb3e86792be3b1534138596a39)

பித்தம் நீங்க:-

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.

புழுக்களை ஒழிக்க:-

சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும். வயிற்றில் இருக்கும் நாடாப் புழுக்களை இது அழிக்கிறது.

புரதச்சத்து பெற:-

பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

மருத்துவகுணமும் உடையது:-

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பல்வலிக்கும் பெருங்காயம் நல்ல மருந்து. பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 12:11:44 PM
உடல் தளர்ச்சி விலக...


முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகு செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 12:14:46 PM
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimage.made-in-china.com%2F2f0j00KiaEZDQqutUo%2FCumin-Seeds.jpg&hash=f189a8aca52c6f006592f8370ec32ba0b7dc52f6)

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 12:17:17 PM
ஏலக்காய் வைத்தியம்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fbigkidz.files.wordpress.com%2F2010%2F08%2Fcardamum.jpg&hash=fc62b508d7cb5bdc47736a66173ea0328f7e36ed)

1. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

2. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.

3. ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

4. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.

5. ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.

6. ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.

7. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 12:19:59 PM
வைட்டமின் சத்துக்கள்


கேரட், வெள்ளரிக்காய், புடலங்காய், போன்றவற்றை சன்னமாகத் துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றாகக் கலந்து, தக்காளி, தேங்காய் துருவல், சிறிது தயிர் சேர்த்து பச்சடி செய்து உட்கொள்ளலாம். இந்த உணவில் நோய் நீக்கவும், தடுக்கவும் ஆற்றல் பெற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குடல் புண்ணை ஆற்றுவதோடு மலச் சிக்கலையும் போக்கும்.

நுரையீரல் நோய்கள்

சிற்றரத்தை 100 கிராம், சீனா கற்கண்டு 100 கிராம் தனித்தனியாக இடித்துப் பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, இரவு சிட்டிகை எடுத்து வாயில் இட்டு பிறகு பால் சாப்பிட்டால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், சளி, வாத, பித்த நோய் ஆகியவை அகலும்.

மலச்சிக்கல்

கடுக்காயைத் தட்டிப்போட்டு ஒரு ஆழாக்கு நீரை பாதியாக கொதிக்க வைத்துக் குலுக்கி குடிக்க வேண்டும் இதை படுக்கும்போதோ விடியற் காலையோ குடிக்கலாம். சிறு குழந்தையாக இருந்தால் தினமும் இரண்டு அல்லது மூன்று பெரிய காய்ந்த திராட்சையை வெந்நீரில் பழத்தை நன்கு பிழிந்து எடுத்துவிட்டு நீரை புகட்டலாம்.

வயிற்றுக் கடுப்பு

வயிற்றில் ஒரு விதமாக வலி வந்து அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்று உணர்ச்சி ஏற்படும். அப்போது வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு, கரைத்த மோரைக் குடிக்க வேண்டும் இந்த வலி நீங்கி விடும்.

இடுப்பு வலி

இடுப்பு வலி, வாயுத் தொல்லை ஏற்பட்டால் நாட்டு மருந்துக்கடையில் சாரணை வேர் கிடைக்கும். அதைச் சிறு துண்டு தண்ணீரில் தட்டிப் போட்டு கொதி வரும்போது அரிசி நொய்யும், கைப்பிடி அளவு பூண்டும் போட்டுக் கஞ்சி வைத்து, சர்க்கரை போட்டு மசித்து சூடாகக் குடிக்கலாம். சிறிது உப்பு போட்டும் குடிக்கலாம் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் வாயுத் தொந்தரவே வராது.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 02:52:25 PM
கட்டிகள் பழுத்து உடைய...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fcommons%2Fthumb%2F2%2F25%2FOnion_on_White.JPG%2F220px-Onion_on_White.JPG&hash=e1f21c62661362c7b1d0b184f83e652479947151)

பெரிய வெங்காயத்தை அடுப்பிலிட்டு சுட்டு சிறிது மஞ்சள் தூளையும், நெய்யையும் விட்டு பிசைந்து கட்டியின் மீது வைத்து கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்துவிடும்.

பழுத்து வீங்கி, உடையாமல் குடைச்சலும், குத்தலுமாகத் தொந்தரவு செய்யும் கட்டியின் மீது புகையிலையை நன்கு விரித்துப் போட்டு அதில் விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கட்டி உடைந்து சீழும் ரத்தமும் வெளியேறி குணமாகும்.

எருக்கன் இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக செய்து விளக்கெண்ணெயில் குழைத்துப் போட்டால் நாள்பட்ட ரணங்கள் ஆறிச் சுகமாகும்.

பழுத்த அத்தி இலை, ஆல், புங்கன் ஆகிய மரங்களின் பட்டையை நன்கு நசுக்கி, புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்டபுண் மீது தடவினால் விரைவில் குணம் தெரியும்.

வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தடவி, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் சுட்ட அரப்பு தேய்த்து குளித்து விட்டால் உடலில் தோன்றும் நமைச்சல் அகலும், சொறி சிரங்கிற்கும் இது நல்ல மருந்து.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 02:54:54 PM
புண் குணமாக...

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

நீர்ச்சுருக்கு

வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

இரவில் மூக்கடைப்புக்கு

எளிய மருத்துவ முறை மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

மலச்சிக்கலுக்கு

இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

கை சுளுக்கு உள்ளவர்கள்

நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

வேனல் கட்டியா

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 02:56:18 PM
கண் நோய் அகல...

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 02:57:39 PM
கபம் நீங்க...

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 02:59:31 PM
வயிறு இதமாக...


புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.

பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

பெருங்காயம்

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.

ஓமம்

1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:02:38 PM
வெள்ளரிக்காய்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.nuonsros.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F12%2FCucumber.jpg&hash=4b1bbaebbf1a54a167f836680ea5b8734067ed71)

இதன் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

பெருங்காயம்

பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

மிளகு

மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

சீரகம்

சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

வெங்காயம்

வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:04:43 PM
வாயு தொல்லையா?


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffaeriesfinest.com%2Fimages%2Fproducts%2Flemon-ginger.gif&hash=d40907a40b79e497d1d4bf221ae2dd6899dbf150)

இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:06:51 PM
சுத்தமான தேனிலே மருத்துவம்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fbenefitsofhoneyblog.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F04%2F895051_f2601.jpg&hash=44347a11345771b925838c414fda5742b638d119)

சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை சுலபமாக நீங்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம் வாந்திபேதி, தீப்புண் விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.

தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமின்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:07:57 PM
மெலிந்த உடல் பருக்க

1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:09:07 PM
இதய நோய் தீர...

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:10:11 PM
முக சுருக்கம் நீங்க...

* பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

* தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

* கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

* தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

* கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:11:45 PM
பூண்டு


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-BLCwVZm7jnU%2FT5UW4j-UHpI%2FAAAAAAAABVk%2Fby1XWtGYifw%2Fs1600%2Fgarlic.jpg&hash=7360d0a3e808d9a1691c4da356aed614d4371922)

பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:13:23 PM
இஞ்சி


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.gojiberryblog.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F12%2Fginger.jpg&hash=b58669fab1f43110db9880ec475f1e792167916a)

இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:15:09 PM
மஞ்சளின் மகிமை


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fstatic.ddmcdn.com%2Fgif%2Fturmeric-1.jpg&hash=c985a6d8304edf416e1b890330c2c3bcf67abc31)

1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும்.

2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான்.

3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும்.

4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள்.

5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும்.

6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும்.

7. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும்.

8. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும்.

9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும்.

10. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும்.

11. மஞ்சளும், கடுக்காயும் பூச சேற்றுபுண் போகும்.

12. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும்.

13. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும்.

14. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது.

15. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும்.

16. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும்.

17. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது.

18. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 03:16:39 PM
குழந்தைக்கு ஏன் நல்லது?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.
தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.
சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.
குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.
தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 04:03:00 PM
தீக்காயங்கள்

தீக்காயம் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.
தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.
Title: Re: ~ பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on May 08, 2012, 04:04:31 PM
இதயம், நுரையீரல் காக்க...

குரல்

நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகம் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

மூக்கிலிருந்து ரத்தம் வருதல்

இரண்டு அவுன்ஸ் ஆடு தீண்டா பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.

நாக்கு

நாக்கில் ஏற்படும் எல்லாவிதமான குறைப்பாடுகளையும் துளசி தீர்த்துவிடும். நாக்கில் சுவையின்மை இருந்தால் அதையும் போக்கவல்லது.
நாக்கு புண்ணாக இருந்தால், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி இலேசாக கொப்பளித்து விழுங்கவும்.

பல்வலி

பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலது புற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட வேண்டும்.

திக்கு வாய்

வசம்பை பொடித்து வைத்துக் கொண்டு இத்துடன் தேனைக் கலந்து கொடுத்து வந்தால் திக்குவாய் சரியாகும்.

தொண்டைப்புண்

இதற்கு சுடுநீரில் உப்பு போட்டு 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை கொப்பளிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 2 தடவை 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் தொண்டைப்புண் ஆறும்.
உப்பு, தயிர், வெங்காயக் கலவை தொண்டைப் புண்ணை ஆற்றும்.
தொண்டையில் ஏற்படும் நோய்களை தேன் குணப்படுத்தும். தேன் கிருமிநாசினியாக வேலை செய்யும்.
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும் சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் கடவ வேண்டும்.

நுரையீரல்

நுரையீரல் நோய்களுக்கு வெற்றிலைச் சாறு நல்லது. நுரையீரல் கப நோய் நீங்க, தேவையான தூதுவளை, முசுமுசுக்கை இலைகளை சுத்தம் செய்து, இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இதயம்

தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்லது.
காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது. அதில் பெருமளவு கரோட்டின் உள்ளது.
பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இதயம் மற்றும் மூளை நரம்புகள் வலிமை பெறும் இரத்தம் ஊறும்.

தூக்கம்

இரவு உணவை முடித்தபின் 1 தேக்கரண்டி தேன் அல்லது மிதமான சூட்டில் 1 டம்ளர் பால் சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
தினமும் மாலையில் 6 மணிக்குள் வேலையை முடித்து அரை மணிநேரம் நடைப் பயிற்சி செய்து, 7மணிக்குள் சாப்பிட்டு முடித்து, இரவில் குளித்து விட்டுப்படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

தழும்புகள்

முட்டையின் வெள்ளைக்கருவை தழும்புகள் மீது தடவி வந்தால் தழும்புகள் மறையும்.
எலுமிச்சைச்சாறு, தக்காளி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவ வேண்டும்.