FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on May 04, 2012, 08:57:05 AM

Title: நாளை அட்சய திரிதியை
Post by: Jawa on May 04, 2012, 08:57:05 AM
நெற்றிக்கு ஒரு சுட்டி
காதுக்கு வைரக்கம்மல்
கழுத்துக்கு பெரிய நெக்லஸ்
கைகள் நிறைய வளையல்ள்
பத்துவிரல்களுக்கும்
இருபது மோதிரங்கள்
இடுப்புக்கு ஒட்டியாணம்
என்னவளே!
இன்னும் ஏதாவது வேணுமா?

அத்தனைக்கும் ஆர்டர் கொடுக்க
திருப்பதி போனேன்
அந்த கடைக்காரரோ-
“இதைவிட பெரிய கடை
இப்போ திருவனந்தபுரத்தில்தான் இருக்கு
அங்கே போ” என்று வெளியே தள்ளினார்.

அங்கே போனால்
அந்த கடைக்காரரோ....
அத்தனையையும் அள்ளி
பூட்டிவைத்துக்கொண்டு
அனந்த சயனத்திலிருந்தார்.
எழுப்பிபார்த்தேன்
எழுந்திருக்கவே இல்லை

அட்சய திரிதியை அன்று
வாங்கினால் அதிஷ்டம்
அன்று வாங்கித்தருகிறேன்
என்று என்னவளிடம்
சொல்லி வைத்திருந்தேன்

நாளை அட்சய திரிதியை
ஏழைத்திருநாட்டில்
நகைக்கடைகளில்
ஏகக் கூட்டமிருக்குமே
என்ன செய்ய?
இன்றிரவே போய்
இடம்பிடித்துக்கொள்ளலாம் என்றால்
திருப்பூர் கொள்ளையன் என்று
விரட்டி அடிக்கிறார்களே!
Title: Re: நாளை அட்சய திரிதியை
Post by: Dharshini on May 04, 2012, 03:21:30 PM
haha nala kavithai jawa friend indru aangalin thindatathai azhaga eduthu soli irukiga