FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 03, 2012, 11:13:58 AM

Title: பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா
Post by: thamilan on May 03, 2012, 11:13:58 AM
புரிய‌வில்லை எனக்கு

செலவு செய்தால்
ஊதாரி என்றனர்
சிக்கனமாய் இருந்தால்
கருமி என்றனர்

ஆத்திரப்பட்டால்
முன்கோபி என்றனர்
அடங்கிப் போனால்
கோழை என்றனர்

தெரிந்ததை சொன்னால்
அதிகப் பிரசங்கி என்றனர்
தெரியாது என்றால்
அடிமுட்டாள் என்றனர்

இருக்கிறது என்றால்
பெருமைக்காரன் என்றனர்
இல்லை என்றால்
வேசதாரி என்றனர்

அகப்பட்டுக் கொண்டால்
குற்றவாளி என்றனர்
தப்பித்துக் கொண்டால்
புத்திசாலி என்றனர்

உரக்கப் பேசினால்
அர‌ட்டைக்கார‌ன் என்ற‌ன‌ர்
அட‌க்கி வாசித்தால்
ஊமைக்கோட்டான் என்ற‌ன‌ர்

அடித்துக் கேட்டால்
அராஜ‌க‌மாம்
அட‌ங்கிப் போனால்
கோழையாம்

காத‌ல் பெண்னை கை பிடித்தால்
ஓடுகாலியாம்
கைவிட்டு விட்டால்
காமாந்திர‌க்கார‌னாம்

எதை செய்தாலும்
குறை கூறும்
பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா இது
Title: Re: பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா
Post by: aasaiajiith on May 03, 2012, 12:07:32 PM
ஏசுவையே ஏசோ, ஏசு என ஏசி
பேசிய மோசக்கார உலகம் இது
பேசுவார் பேசட்டும், ஏசுவார்  ஏசட்டும்
உன்கொளகையில் நீ
பிடிப்பாய் இருந்தால் போதும்
தொடர்ந்து முன்னேறு தோழா !
போற்றுவார் போற்றலும் , புழுதி வாரி
தூற்றுவார்   தூற்றலும்
போகட்டும் ஒருவருக்கே !
Title: Re: பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா
Post by: suthar on May 03, 2012, 07:36:16 PM
tamizh unmaiyaana varigal......
athanaiyum unmai........
Title: Re: பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா
Post by: gab on May 04, 2012, 02:13:27 AM
உங்கள் கவிதையை படிக்கும் பொழுது "வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் வையகம் இதுதானடா" என்கிற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது . யதார்த்தமான நல்ல கவிதை தமிழன்.
Title: Re: பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா
Post by: Jawa on May 04, 2012, 07:32:29 AM
Nalla solli irukeenga thamilan machi...... Ithu indha kali ulagathuku mutrilum porundhiya ondru.....