FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 03, 2012, 10:32:49 AM

Title: அவளுக்கு அற்பனமாய் !
Post by: aasaiajiith on May 03, 2012, 10:32:49 AM
அதிகாலை உதித்ததும்,அழகு தூக்கம் கலைந்து
அரைகுறையாய்,அறை முழுதும் நுரை நுரையாய்
அரைகுளியலாய் குளியல் அறையில் குளியல் போட்டு
அரைவயிறு நிரம்ப ஆங்கில சிற்றுண்டியை
அரக்கபரக்க அமுக்கி முழுங்கிவிட்டு
அவசரம் அவசரமாய் அலுவலகம் கிளம்பிட என்
அழகு வாகனத்தை ஆரம்பிக்கும் போதே -அகம் முழுதும்
அட்டையாய்  ஒட்டி கொள்ளும் அன்பானவள் அவள் நினைவு   
அவளின் அழகு நினைவின் அருமை நிழலிலேயே
அழகழகாய் புதுபுதிதாய் பல பதிவுகளுக்கு
அலுவலகம் அடைவதற்க்குள் புள்ளிகள் சேகரிப்பேன்
அப்படி இப்படி என அடித்து பிடித்து ஆர்ப்பாட்டத்துடன்
அலுவலகம் வந்து அமைதியாய் இருக்கையில் அமர்ந்தால்
அஞ்சல் (மின்) சரிபார்க்க ஆசைபடுவேன் ஆசையாய்
அவள் பெயரையே கடவுசொல்லாய் கொடுத்து மேன்மையாய்
அஞ்சலை அவளுக்கு என் அஞ்சலி சமர்பிப்பேன்
அந்த பொழுது அவள்; நினைவை கடந்து செல்லும்
அணுகனமும் ,அவள் நினைவு குடைந்திடும் சுகம் தனி சுகம்
அலுவலகத்தின் ஒரு துறையில், தனி அறையில்
அவளுக்கு பிடித்த, மனம் கவர்ந்த  வெளிநாட்டு மிட்டாய் (FERRERO ROCHER )
அழகழகாய் மின்னொளியில் அடுக்கி வைக்கபட்டிருக்கும் அமுதமாய்
அள்ளி அள்ளி அவளுக்கு கொடுத்திட ஆசைக்கு ஆசை இருந்தும்
அவள் வெகு தொலைவில் தள்ளி இருக்கும் காரணத்தால்
அந்தோ பாவம் ! ஆசையின் ஆசையும் தள்ளியே
அதிசயம் இல்லை, ஆனால் ஆச்சரியமான ஒரு தகவல்
அந்த வெளிநாட்டு மிட்டாய்க்கு தனிச்சிறப்பு ,தனிதரம் இருந்தும்
அவளுக்கு பிடிக்கும் எனும் தனி தரம் இருந்தும்
அந்த வெளி நாட்டு மிட்டாயை நான் இன்றுவரை சுவைக்கவில்லை
அவளுக்கு அற்பனமாய் !
Title: Re: அவளுக்கு அற்பனமாய் !
Post by: aasaiajiith on May 30, 2012, 04:09:21 PM
அன்பர் ஒருவரின் அறிமுகத்தால்
அன்பளிப்பாய் அடைந்திருக்கின்றேன்
அந்த வெளிநாட்டு மிட்டாயை ??



அன்பானவரே என்ன செய்யலாம்
அறிவுருத்துங்களேன் !
Title: Re: அவளுக்கு அற்பனமாய் !
Post by: supernatural on October 15, 2012, 05:22:57 PM
avalukku arppanam arumai kavibgare...
Title: Re: அவளுக்கு அற்பனமாய் !
Post by: aasaiajiith on October 16, 2012, 10:43:00 AM
nandri ..!