FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on May 02, 2012, 04:58:44 PM
-
இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற,
பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால்,
உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.
துணிவு, உள்ளத்தூய்மை, லட்சியத்தில் ஈடுபாடு, லாப
நஷ்டங்களில் சிந்தனைஇல்லாமல் இருப்பதுவே
யோகத்தின் ரகசியம்.
ஒவ்வொருவரும் தன் கடமையைச் செய்ய வேண்டியது
அவசியம். அவற்றுள் பிறந்த நாட்டுக்கு உழைப்பதை
முதன்மையான கடமையாகக் கொள்வதே அனைத்திலும்
முக்கியமாகும்.
கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி,
தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும்
சரி…பிறரை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, நல்லதைச்
செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.
தாய் நம் உடலை வளர்க்கிறாள். தாய்மொழி உயிரை
வளர்க்கிறது. உயிரை வளர்க்கும் உயர்வு இருப்பதால்
தான் அதைத் தாய்மொழி என்கிறோம்.
அறிவுத்தெளிவைத் தவறவிடாதே. ஓயாமல் தொழில்
செய்து கொண்டிருந்தால் நீ எது செய்தாலும் அது
நல்லதாகவே முடியும்.