FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Dharshini on July 30, 2011, 05:27:55 AM

Title: விரதம் இருக்கீங்களா? அப்போ! இதப்படிங்க முதல்ல
Post by: Dharshini on July 30, 2011, 05:27:55 AM
இருக்கிறவங்களும் உடல் எடையை குறைக்கணும்னு விரதம் இருக்கிறவங்களும் பட்டினி கிடந்தாலோ, குறைவா சாப்பிட்டாலோ அது சாத்தியமாகும்னு நினைக்கிறார்களே தவிர, கலோரி குறைவான உணவை சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கிறதில்லை.

சாப்பாடு மூலமா பாசத்தைக் காட்ட நினைக்கிற மக்கள் இந்தியாவில் அதிகம். கல்யாணம், காது குத்தல்னு எந்த விசேஷமானாலும் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மகிழ்ச்சியை உணவு மூலம் காட்டற மாதிரியே சோகத்தையும் காட்டறோம். பரீட்சைல ஃபெயிலாயிட்டாலோ, அம்மா - அப்பா திட்டினாலோ சாப்பிடாம இருக்கிறோம்.
       
விரதங்கிறது வெறுமனே சாப்பாட்டைத் தவிர்க்கிற விஷயமில்லை. வயிரோடு சேர்த்து மன உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்கிறது தான் முறையான விரதம். ஒரு பக்கம் விரதம்னு சொல்லிக்கிட்டு வெளி வேலைகளை வச்சுக்கிட்டு, அலையறது. டி.வி. பார்க்கிறது மாதிரி வேலைகளைச் செய்யறது ரொம்ப தப்பு. அது எதிர்மறையான பலன்களைத்தான் தரும் என்கிற டாக்டர் கவுசல்யா, விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரைக் கலந்தாலோசித்து, உடல் நலத்தைப் பரிசோதித்த பிறகும், எப்படி விரதமிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டும் ஆரம்பிப்பதே சரியானது என்கிறார்.
     
வாரத்துல 6 நாள் கண்டதையும் சாப்பிடறோம். ஒரு நாள் சாப்பிடாம, ஒட்டு மொத்த இயக்கத்துக்கும் ஓய்வு கொடுக்கிறதால விரதங்கிறது ரொம்ப நல்ல விஷயம். உடம்புல உள்ள கழிவுகள், நச்சுப் பொருள்கள் வெளியேற இது உதவும். ஹெச்.டி.எல்.னு நல்ல கொலஸ்ட்ராலோட உற்பத்தி அதிகமாகும். ஆனாலும் யார் விரதம் இருக்கலாம், யாருக்கு அது கூடாதுனு சில வரையறைகள் இருக்கு. அதன்படி கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கிறவங்க, ரத்த சோகையாலோ, ரத்த அழுத்தத்தாலயோ, நீரிழிவாலயோ பாதிக்கப்பட்டவங்களுக்கு விரதம் கூடவே கூடாது" என்கிறார் ஊட்டச்சத்து மற்றும் யோகா நிபுணரான சந்திரா.

"விரதம்னா காலைலேர்ந்து ராத்திரி வரைக்கும் ஒண்ணுமே சாப்பிடாம இருக்கிறதுனு அர்த்தமில்லை. ராத்திரி முழுக்க எதையுமே சாப்பிடாம இருக்கிறதால, காலைல எனர்ஜி அளவு கம்மியா இருக்கும். காலைலயே எதுவும் சாப்பிடாம விரதத்தைத் தொடங்கறப்ப, அந்த எனர்ஜி இன்னும் குறையும். ஏற்கெனவே வேற ஏதாவது சத்துக்குறைபாடால பாதிக்கப்பட்டவங்களுக்கு இதனால இன்னும் பிரச்சினை அதிகமாகும். விரதமிருக்கிறதுனு முடிவு பண்றவங்க, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.
 
ராத்திரி முழுக்க சாப்பிடாம இருந்து, மறுநாள் காலைல அதைத் தவிர்க்கிறதைத் தான் (பிரேக்கிங் தி ஃபாஸ்ட்) பிரேக்ஃபாஸ்ட்னு சொல்றோம். ஆனா காலைலயும், மதியமும் சாப்பிடாம இருக்கிறப்ப ராத்திரி வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடுவோம், நம்மையும் அறியாமலேயே. எடையைக் குறைக்கணும்னு விரதம் இருக்கிறவங்களுக்கு இது நேரெதிரா வேலை செய்து, உடல் எடையைக் கூட்டும். அதனால் உயரத்துக்கேத்த எடை, நல்ல ஆரோக்கியம், சரியான சமவிகித சாப்பாடு எடுத்துக்கிற, தினசரி உடற்பயிற்சியோ, யோகாவோ செய்யறவங்க மட்டுந்தான் தகுதியானவங்க.

விரதத்தை முடிக்கிற போது, நாள் முழுக்க பட்டினி, இருந்ததுக்கெல்லாம் சேர்த்து, விருந்து மாதிரி ஒரு பிடி பிடிக்கிறதும் ரொம்ப தப்பு. முதல்ல கொஞ்சமா ஏதாவது உணவு, கூடவே கொஞ்சம் ஜூஸ் எடுத்துக்கிட்டு, அப்புறமா வழக்கம் போலச் சாப்பிடலாம்" என்கிறார் அவர்.

தினசரி பயன்படுத்துகிற டூ வீலரோ, காரோ... மக்கர் பண்ணாமல் தொடர்ந்து இயங்க, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை சர்வீஸ் செய்கிறோம். உடலும் அதன் இயக்கமும் கூட அப்படித்தான். இயக்கத்தை சுத்தம் செய்து, அதற்கு ஓய்வும் கொடுக்கிற அற்புதமான விஷயமே விரதம். மேற்சொன்ன தகவல்களை நினைவில் கொண்டு அதைத் தொடங்குவதும், தொடர்வதும் பாதுகாப்பானது!
Title: Re: விரதம் இருக்கீங்களா? அப்போ! இதப்படிங்க முதல்ல
Post by: Global Angel on July 30, 2011, 05:39:54 AM
nice ... nalla pathivu... naan virathame erukurathillapaa ;)
Title: Re: விரதம் இருக்கீங்களா? அப்போ! இதப்படிங்க முதல்ல
Post by: Dharshini on July 30, 2011, 03:58:44 PM
amadi ne  varathuku ethana naal viratham irupa?
Title: Re: விரதம் இருக்கீங்களா? அப்போ! இதப்படிங்க முதல்ல
Post by: Global Angel on July 30, 2011, 04:37:59 PM
varusathuku 10 nal ;)
Title: Re: விரதம் இருக்கீங்களா? அப்போ! இதப்படிங்க முதல்ல
Post by: Dharshini on July 31, 2011, 07:54:21 PM
idhuku ne viratham illama irukalam di  ;D ;D ;D