FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 30, 2012, 09:37:11 AM
-
"கொஞ்சம் கொஞ்சமாக
விட்டுவிட முயற்சி செய்"
அறிவுரையை அள்ளி வணங்கினார்
ஒரு பெரியவர் ஒரு இளைஞனுக்கு
"அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாகத் தானே
விட்டுக் கொண்டிருக்கிறேன்"
என்று பு(ன்ன)கைத்தான்
ஸ்டைலாக
புகை பிடித்துக் கொண்டிருந்த
இளைஞன்
-
நகை சுவையை கூட கவிதையில் அருமையாய் பதிவி செய்திருகின்றீர்கள்.... உங்கள் பதிவுகளில் தேக்கம் ஏன் தமிழன் ... தொடரட்டும் உங்கள் பொன்பதிபுக்கள்
-
realy nice tamil....