FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on April 29, 2012, 08:07:40 PM
-
தேவையான பொருட்கள்
- கீரை ஒரு கட்டு
- (அது எந்த கீரையாகவும் இருக்கலாம்)
- பயத்தம் பருப்பு அரை கப்
- உப்பு தேவையான அளவு
- வறுத்து அரைக்க:
- உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
- மிளகு அரை டீ ஸ்பூன்
- சீரகம் ஒரு டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 2
- பெருங்காயம் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும்.
- அடுத்து,
வருக்கக் கொடுத்துள்ள பொருட்களை (மிளகாயைத் தவிர) எல்லாம் வெறும்
வாணலியில் பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை
அணைத்துவிட்டு வாணலியின் சூட்டிலேயே மிளகாயை போட்டு வறுத்து பின்
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும்.
பருப்புடன் கூடிய கீரையில் இந்தப் பொடியைத் தூவி நன்கு கலந்து இரண்டு
நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். விரும்பினால் தேங்காய்
துருவலும் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கலாம்.
குறிப்பு:
குறிப்பு: மேற்கண்ட பொடியை மொத்தமாக செய்து பத்திரப் படுத்திக் கொண்டு
அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் எந்த காய்கறி யையும்
வைத்து போரித்த் கூட்டு செய்யலாம்