FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on April 29, 2012, 08:05:48 PM
-
தேவையான பொருட்கள்
- அவல் கால் கிலோ
- பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்
- பச்சை மிளகாய் ஒன்று பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க
செய்முறை
கால் கிலோ எடுத்துக் கொண்டு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸில்
போட்டு அதிக நீர் சேர்க்காமல் மிக கெட்டியாக (சாதாரண வடை மாவைவிட
கெட்டியாக) ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு நறுக்கிய இஞ்சி
பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வடையாக தட்டி எண்ணெயில்
பொறித்து எடுக்கவும்.
குறிப்பு:
மிகக் குறைந்த நேரத்தில் எளிதில் இந்த ஸ்நாக்சை செய்துவிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.