FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on April 29, 2012, 08:03:28 PM
-
இஞ்சி துவையல்
காலப் போக்கில் நாம் மறந்து போன உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ஜீரணத்திற்கு மிகவும் உகந்த எளிமையான பக்க உணவு.
தேவையான பொருட்கள்
- 6 " இஞ்சி துண்டு
- உளுத்தம் பருப்பு ஒரு கப் (சிறியது)
- புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
- காய்ந்த மிளகாய் 2
- உப்பு தேவையான அளவு
- பெருங்காயம் சிறிதளவு
- எண்ணெய் -வதக்குவதற்கு
செய்முறை
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை லேசாக சிவக்கும் படி வறுக்கவும்.
- பிறகு காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக், அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் நற நற வென்று அரைக்கவும்.
குறிப்பு:
இதை
சாதத்துடன் பிசைந்து சாப்பிடவோ அல்லது மோர் சாதத்திற்குத் தொட்டுக்
கொள்ளவோ மிகவும் நன்றாக இருக்கும். அதிக காரம் சாப்பிடாதவர்கள் சிறிது
தேங்காயும் வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.