FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on April 29, 2012, 08:01:09 PM
-
தேவையான பொருட்கள்
- கோங்கூரா (புளிச்ச கீரை) - 1 கட்டு
- பெரிய வெங்காயம் - 1
- காய்ந்த மிளகாய் - 6
- புளி - எலுமிச்சை அளவு
- நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பூண்டு - 6 பல்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
- கோங்கூராவை மண் போக அலசி நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- கோங்கூராவை வதக்கவும்.
- எல்லாவற்றையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.