FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on April 29, 2012, 04:02:04 PM
-
படித்ததில் பிடித்தது!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.satyamargam.com%2Fimages%2Fstories%2Fnews11%2Fmullaiperiyaru-dam.jpg&hash=e2582c2306054c9589c8da4fa6fb5f930fa00cc7)
’முல்லைப் பெரியாறு’
சொல்லிப் பாரு
நற்றமிழ்ப் பேரு
நம்மை ஏய்ப்பது யாரு?
உடைக்க நினைப்பது
ஒற்றுமை உணர்வுகளை
தண்ணீரை வைத்து
தானியம், காய்கறி,
அரிசியெனப் பயிரிடாமல்
அரசியலைப் பயிரிடுகின்றாய்
அண்டை மாநிலமே
அரிசியும் பருப்பும் தந்தும்
சண்டை போட்டே
சகோதரர்களின்
மண்டை ஓட்டை வைத்து
மக்கள் ஓட்டுக்கு அலைகின்றாய்
உடைப்பதில் தான்
இடைத்தேர்தல் வெற்றி
கிடைப்பதென்பது
மடையர்களின் எண்ணம்
தமிழின் உதிரமாய்
உன்றன் மொழியும்
தமிழனின் உதிரமும்
தட்டிப் பறிக்கின்றாய்
உன்றன் பூமியில்
உள்ளதாய்ச் சாமியை
உவப்புடன் தேடி
உன்றன் பூமிக்கு வந்தவன்
உதிரம் குடிக்கும் நீ
உலக மகா அறிவிலி
அணை கட்டாதே
அன்பால் எம்மை
அணைக்கட்டு!
- 'கவியன்பன்' அதிரை. கலாம் காதிர்
-
முல்லைப் பெரியாறு’
சொல்லிப் பாரு
நற்றமிழ்ப் பேரு
நம்மை ஏய்ப்பது யாரு?
Surf மச்சி இந்த வரிகள் சூப்பர்
-
பாராட்டுக்கள் இக்கவிதையை எழுதியவருக்கு!
நன்றி பொம்மி!