FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 29, 2012, 12:34:23 PM
-
ஆசையின் சிறப்பம்சங்கள் பல அவற்றுள்
ஆசையாய் மிக சிறப்பானவை சில
ஆசைகள் அற்று வாழ புத்தனுக்கே
ஆசையாம் !
ஆசைதான் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு சாரம் .
ஆசைதான் வாழ்க்கையின் வசீகர அழகிற்கு ஆரம்.
ஆசைஅற்று வாழ்பவனுக்கு வாழ்வே பெரும் பாரம் .
ஆசைமீது எவரும் எப்போதும் பட்டுவிடலாம் ஆசையை
ஆசை படுவது மிக எளிது
ஆசை படுவதை அடைவது அதனிலும் மிக அரிது .
ஆசையை அடைய மனதில் ஒரு தேடல் வேண்டும் .
ஆசையை அடைய தீயாய் தகிக்கும் தீரா வேட்கை வேண்டும் .
ஆசையை அடைய தளர்வில்லா நம்பிக்கை வேண்டும் .
ஆசையை அடைய ஏல்லாவற்றையும் விட
தன்னம்பிக்கை வேண்டும் .
ஆசையை ,ஆசை பட்டதை அடைய
ஆசை பட்டால் , கனவு கண்டால் மட்டும் போதாது
ஆசை மீது ஆசை வேண்டும்
-
ஆசைகள் அற்று வாழ புத்தனுக்கே
ஆசையாம் !
அனைத்தும் துறந்த புத்தனின் ஆசை..வித்யாசமான சிந்தனை
ஆசைதான் வாழ்க்கையின் வசீகர அழகிற்கு ஆரம்.
உண்மைதான் ..ஆசை இல்லா வாழ்வில் ஈடுபாடு தான் ஏது??ஆர்வம்..ஈடுபாடு இல்லது வசீகரம்தான் ஏது?
ஆசைமீது எவரும் எப்போதும் பட்டுவிடலாம் ஆசையை
ஆசை படுவது மிக எளிது
ஆசை படுவதை அடைவது அதனிலும் மிக அரிது
ஆசைபடும் பாழும் மனதிற்கு இது புரிவதில்லையே??
ஆசையை அடைய தளர்வில்லா நம்பிக்கை வேண்டும் .
ஆசையை அடைய ஏல்லாவற்றையும் விட
தன்னம்பிக்கை வேண்டும் .
ஆசையை ,ஆசை பட்டதை அடைய
ஆசை பட்டால் , கனவு கண்டால் மட்டும் போதாது
ஆசை மீது ஆசை வேண்டும்
நம்பிக்கை..தனம்பிக்கை...இவை அனைத்தையும் விட..நம் ஆசை மீது மிகுந்த ஆசை வேண்டும்...
வித்தியாசமான ..புதுமையான வெளிபாடு ஆசையை பற்றி ....