FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 30, 2011, 05:15:47 AM
-
தவறாக
நிகழ்ந்து விட்டதென்
பிறப்பு
பீ அள்ளும்
கைகளாகவோ
ஏர்பிடிக்கும்
தோள்களாகவோ
சேறு மிதிக்கும்
கால்களாகவோ
அல்லாமல்
வேதாதங்களின்
தொடைகளுக்கிடையில்
வழிந்திறங்கும்
பிறப்பு கழிவுகளாக
பண புழுக்கமிகுந்த
அறையில்
அய்வகை உணவுகள்
தலையில் ஒழுக
அறிவற்றுலரும்
கூட்டத்திலென
தவறாக
நிகழ்ந்துவிட்டதென்
பிறப்பு
-
nice kavithai ;)
-
danks :-[ :-[