FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 27, 2012, 05:26:49 PM

Title: ~ கை வைத்தியத்தில் மிளகின் பயன்கள்! ~
Post by: MysteRy on April 27, 2012, 05:26:49 PM
கை வைத்தியத்தில் மிளகின் பயன்கள்!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-nXhBYQKruYo%2FTa8rvMxYuKI%2FAAAAAAAAOTo%2F0ntymxLtKjw%2Fs1600%2FBlack-Pepper.jpg&hash=f06bc57103e170bf3662d90c8fe09b022fa8d873)

ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பவை. குணமாக்கும் பண்பையுடைய மிளகின் மற்ற குணநலன்களையும் அறிந்துகொள்வோமா......


* ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.

* தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும்.

* ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

* பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.

* சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.