FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Aswin on April 26, 2012, 10:07:04 PM

Title: Ashampoo Office 2010 மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய
Post by: Aswin on April 26, 2012, 10:07:04 PM
தற்போது அலுவலக தேவைகளுக்கு அதிகளவானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட MS Office ஆகும்.
எனினும் இதனது முழுமையான பதிப்பின் பயனைப் பெறுவதற்கு 120 டொலர்கள் என்ற தொகையை செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.

ஆனால் தற்போது இதற்கு பல்வேறுபட்ட மாற்று மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றுள் MS Office ற்கு சிறந்த மாற்றீட்டு மென்பொருளாகக் காணப்படுவது Ashampoo Office ஆகும். எனினும் இதனையும் 60 டொலர்கள் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.

எனினும் தற்போது இலவசமாக லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கக்கூடிய தற்காலிக வசதி ஒன்றை Ashampoo நிறுவனம் வழங்கியுள்ளது. பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தரவிறக்கம் செய்ய முடியும்.

1. தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று கேட்கப்பட்டுள்ளவற்றை பூர்த்தி செய்து Submit Registration என்பதை அழுத்தவும். http://www.softmaker.de/reg/ash10_en.htm

2. தற்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் உள்நுளையவும். அதனுள் SoftMaker எனும் பெயரில் இருக்கும் மின்னஞ்சலில் உங்களுக்கான லைசன்ஸ் கீ அனுப்பப்பட்டிருக்கும்.

3. அடுத்ததாக பின்வரும் இணைப்பிற்கு சென்று Ashampoo Office 2010 இனை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://www.ashampoo.com/dl/0338/ashampoo_office2010_fm.exe
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi880.photobucket.com%2Falbums%2Fac10%2Fmsiyath%2Fashampoo_office_2010.jpg&hash=c9aad70947fa880f29a2cb0640712fa46607d9c1)

Title: Re: Ashampoo Office 2010 மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய
Post by: <SinDhu> on April 26, 2012, 10:52:09 PM
Thanks korea machan  ;) ;) ;) ;) ;) ;) ;)