FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: spince on April 26, 2012, 09:24:30 PM
-
இதுவும் கடந்துபோகும்.
மாலை நேரம், துறவி ஒருவர் தெருவோரமாக உட்கார்ந்து இருந்தார், அப்போது அந்தப் பக்கமாக ஒரு வியாபாரி தொங்கிய முகத்துடன் வந்தார். துறவி அவரைக் கவனித்துவிட்டார். பக்கத்தில் அழைத்து,
"என்னப்பா, உன் முகத்தில் இவ்வளவு சோகம்..?"
"புதிதா ஒரு தொழில் ஆரம்பிச்சேன். அது நஷ்டமாகி விட்டது."
துறவி சிரித்தார் இரண்டே இரண்டு சொற்களை மட்டும் சொன்னார். "இதுவும் கடந்துபோகும்..!"
சில வாரங்கள் கழித்து, அதேமாதிரி ஒரு மாலை நேரம், அதே துறவி அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தார். அந்த வியாபாரி அவரை நோக்கி வந்தார். ஆனால் இப்போது அவர் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. துறவி முன்னால்
"சுவாமி, உங்க சொல்லின் படி நான் அதே தொழில்ல தொடர்ந்தேன், இப்போது அதிக லாபம். அதிக மகிழ்ச்சி..!"
துறவி சிரித்தார். அதே இரண்டு சொற்களைத் திரும்பச் சொன்னார். "இதுவும் கடந்துபோகும்..!"
(எந்த ஒரு இன்பத்துக்கு பின்னாலும் துன்பமே காத்து இருக்கிறது. அது விரைவாகவும் வரலாம் அல்லது தாமதமாகவும் வரலாம்.