FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: spince on April 26, 2012, 09:15:46 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1110.photobucket.com%2Falbums%2Fh457%2Fspince1%2F528622_139060536224877_100003627957578_160183_87778812_n.jpg&hash=2ccbab52a9b84d07dc7d241a73c11192401e4407)
எதிர்பார்ப்புக்கள்தான் மனக்கவலை.
குருவிடம் "உங்களுக்கும் உங்களின் சீடர்களுக்கும் விருந்தளிக்க விரும்புகிறேன்" என்றான் அரசன். "அப்படியா..? சரி நாளை வருகிறோம்..!" என்றார் குருநாதர். அரசன் மகிழ்ச்சியோடு திரும்பிச்சென்றான்.
இதைக் கேட்ட சீடர்களுக்கு நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம் " என்று சந்தோஷம் கொண்டார்கள்.
மறுநாள் காலை. குருவும் சிஷ்யர்களும் அரசனின் அழைப்புக்காகப் விருந்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் அரண்மனையை நெருங்கும் போது. உள்ளே இருந்து ஒரு மந்திரி ஓடிவந்தார். குருவை வணங்கினார்.
"மன்னிக்கவேண்டும்.. அரசர் ஓர் அவசர வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்துவிட்டது..!"
"அப்படியா.. நல்லது..!" நாங்கள் இன்னொருநாள் வருகிறோம்..!"என்றார் குருநாதர்.
சிஷ்யர்களுக்கு முகம் சுருங்கிவிட்டது. "இப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்றது..?" என்று முணுமுணுத்தார்கள்.
"ஏன்? இவ்வளவு நாளாக எப்படிச் சாப்பிட்டோம்..? அதற்குள் மறந்துவிட்டதா..? ஒரே ஒரு எதிர்பார்ப்பு ஆசை.., செய்யும் விளையாட்டைப் பார்த்தீர்களா..! சரி, வாருங்கள் வழமைபோல் பிட்சைக்குச் செல்வோம்..!"என்று கூறி சிரித்தார் குரு. சீடர்கள் தெளிந்தவர்களாய் பின்னே நடந்து சென்றார்கள்.
(எதிர்பார்ப்புக்கள் எங்கே இருக்கிறதோ.. அங்கேதான் மனக்கவலைகள் இருக்கின்றன.ஆகவே எவரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1110.photobucket.com%2Falbums%2Fh457%2Fspince1%2F528622_139060536224877_100003627957578_160183_87778812_n.jpg&hash=2ccbab52a9b84d07dc7d241a73c11192401e4407)
எதிர்பார்ப்புக்கள்தான் மனக்கவலை.
(எதிர்பார்ப்புக்கள் எங்கே இருக்கிறதோ.. அங்கேதான் மனக்கவலைகள் இருக்கின்றன.ஆகவே எவரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
edirpaarpugal illaama vaaznda endha kavalaiyum irukiradhu illa.
eppavum edho onnu yaartavo edirparthe life la pala naal vaazharom.
nice story with moral.
tnks for sharing