FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thenmozhi on July 03, 2026, 05:57:59 PM
-
ஆணவப் படுகொலை
காதல் இரு உயிர்களின் மொழி !
காதலை கட்ட முடியாது
சாதியின் சங்கிலியால்..
ஆணவம் கண்களை மூடும்போது, இரத்தமாகின்றன அன்பின் இதயங்கள் !
"குடும்ப மரியாதை" என்ற பெயரில்
கொல்லப்படுகிறது மனிதம் தினமும் !
மண்ணில் புதைகின்றன
மலர வேண்டிய கனவுகள் !
அம்மாவின் கண்ணீர் ஆறாக ஓடுகிறது...
இரு உயிர்களை அழித்தாலும்,
யாராலும் அழிக்க முடியாது
உண்மையான காதலை...
சாதியை விட மனிதநேயம் உயர்ந்தது !
அன்பே வாழ்வின் அடையாளம்,
ஆணவம் அல்ல !
ஆணவப் படுகொலையை ஒழிப்போம்!