FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 02, 2026, 01:11:06 PM

Title: யார் சுகவாசி....?
Post by: MysteRy on June 02, 2026, 01:11:06 PM
(https://i.ibb.co/N2VQkr5c/711680190-122291950208037466-5543039223203705333-n.jpg) (https://ibb.co/s9mkDCn8)

☻ சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி..

☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி..

☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி..

☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி..

☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி..

☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி..

☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி..

☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி..

☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி..

☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி..

☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி..

☻ நாவடக்கம் உடையவன் சுகவாசி..

☻ படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி..

☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி..

☻ தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி..

☻ கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி..

☻ கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி..

☻ மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி..

☻ ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி..

☻ வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி...

☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி..

☻ தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி..
☻ உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி..

☻ வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி..

☻ 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி..