FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 29, 2026, 12:41:02 PM

Title: இதை கொஞ்சம் நிறுத்துங்க வாலிப வயோதிக நண்பர்களே....
Post by: MysteRy on May 29, 2026, 12:41:02 PM
(https://i.ibb.co/VY3cyN9x/708833036-122291426426037466-2165898230422940954-n.jpg) (https://ibb.co/whYFHLg7)

கோடைக்காலங்களில் எங்கும் கிடைக்கும் திராட்சை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். திராட்சைகளில் எல்லாமே மருத்துவ குணம் கொண்டது என்றாலும் அதில் கருப்பு திராட்சை அதிக மருத்துவ குணம் கொண்டது. அதே சமயத்தில் Seedless திராட்சை என்று சொல்லப்படும் விதையில்லா திராட்சை இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் ஆகிவிட்டது. உண்மையில் விதையில்லா திராட்சையில் நன்மைகள் உண்டா?

கருப்பு திராட்சை வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கி உற்சாகம் தரக்கூடியது. முகப்பரு வராமல் காக்கும். உடல் சூட்டை குறைக்க கூடியது. அதே போன்று சரும செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இதில் உள்ள விட்டமின் ஈ சருமத்தில் ஈரப்பசையை தக்க வைத்து சருமம் வறண்டு போகாமல் வைத்திருக்கும் முக்கியமாக நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம்.

அடுத்து இதில் விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து கொலஸ்ட்ராலை கட்டுப்பாடாகவும் சீராகும் வைத்துக்கொள்ளும். மேலும் கருப்பு திராட்சை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் மேம்படுத்தும்.

அடுத்ததாக இதில் உள்ள ஆன்தோசயனின் பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளதால் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக கருப்பு திராட்சை மார்பக புற்று நோய்யை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய ஆற்றல் கொண்டது. இந்த பழத்தில் உள்ள லியோலிக் அமிலம் மயிர் கால்களை முடியின் வேர் பகுதியில் இருந்து வலிமையாக்கும்.

இப்பொழுது Seedless திராட்சை நல்லது அல்ல என்பதற்கான காரணத்தை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் Seedless பழங்கள் அவற்றில் உள்ள இனிப்பு சுவைக்காக வணிக நோக்கில் கொண்டுவரப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள். இயற்கை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன் தேவைக்காக மாற்றியமைக்கக் கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Seedless பழங்களை கொண்டு வந்ததற்கான காரணம் அதிக லாபம் ஈட்டவும் அதிகளவில் பழங்களை உற்பத்தி செய்யவும் தான்.

இது இயற்கையின் சமச்சீர் நிலையை குறைக்கிறது. இயற்கையாகவே விதை உள்ள பழங்கள் தான் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. வீரிய ரக விதைகளை கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில் ஆக்சின் என்ற ரசாயனம் கலக்கப்பட்டும். எனவே இந்த Seedless பழங்களை வாங்கி சாப்பிடுவதை நிறுத்துங்கள்.