FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 26, 2026, 01:10:15 PM

Title: வறட்டு இருமல் மருந்து ....
Post by: MysteRy on May 26, 2026, 01:10:15 PM
(https://i.ibb.co/zTSBzFS7/images.jpg) (https://imgbb.com/)



கிராம்பு இருபது கிராம்

பனை வெல்லம் பதினைந்து கிராம்

இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும் நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு காய்ச்சி கொதிக்கும் பாலில் அரைத்து வைத்துள்ள பொடியில் கால் தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டாமல் குடித்து வர வறட்டு இருமல் தொண்டைப் பகுதி

இரணங்கள் ஆறும் வயிற்றுப் பகுதியில் உள்ள புண்களும் ஆறும்

குழந்தைகளுக்கு ஐந்து கிராம் பொடியைப் பாலில் கலந்து கொடுக்கலாம்

மருந்து இரண்டு

நெல்லிக்காய் பதினைந்து கிராம்

நாட்டு ரோசாப்பூ பத்து கிராம்

ஏலக்காய் தூள் பத்து கிராம்

தேன் தேவையான அளவு

பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்

அத்துடன் ரோசாப்பூ இதழ்கள் ஏலக்காய் தூள் தேன் கலந்து ஒருநாள் முழுவதும் வெயிலில் வைத்து சூரியப் புடமிட்டு எடுக்கவும்

மறுநாள் முதல் தினமும் காலை மாலை என இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து

சாப்பிட்டு வர ஏழு நாட்களில் பரிபூரண குணம் கிடைக்கும் அது மட்டுமன்றி இதை சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்களும் நீங்கும்

இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்...