FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on May 08, 2026, 09:49:44 PM
-
நிலையற்ற வாழ்வில் நிழலை தேடி..
நித்தமும் அலைகிறோம்..
ஏன்? எதற்கு? எதை நோக்கி?
விடை தெரியா பயணத்தில்
வேகம் மட்டும் குறையவில்லை!
நேற்று துரத்திய கனவுகள் இன்று இல்லை..
இன்று துரத்தும் ஆசைகள் நாளை இல்லை..
ஆனாலும்...
அன்பிற்காக ஏங்கும் ஓர் இதயம்..
தனக்கென ஒரு அடையாளம்
தேடி தவிக்கும் ஓர் உயிர்..
நாளை எனும் நம்பிக்கையில்
நகர்கிறது நம் கால்கள்!
முடிவில் நாம் தேடுவது
பொருளோ, புகழோ அல்ல...
"மன அமைதி" எனும் சிறு நிழல் மட்டுமே!