FTC Forum

Friends Tamil Chat FM => நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் => Topic started by: Forum on April 14, 2026, 09:44:38 PM

Title: நெஞ்சம் மறப்பதில்லை-007 (என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி)
Post by: Forum on April 14, 2026, 09:44:38 PM
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-007

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

'என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி'”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-007 (என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி)
Post by: MaiVizhi on April 16, 2026, 10:17:22 PM


‎ஒரு ஆவரேஜ் மிடில் கிளாஸ் பேமிலில பிறந்த எல்லாரோட கனவும் சீக்கிரம் படிப்பு முடிச்சு ஒரு வேலைக்கு போகணும்னு தான். அப்படித்தான் எனக்கும் இருந்துச்சு.

‎எங்க ஊரு பாலக்காடு பார்க்க ரசிக்க இயற்கை அழகா இருந்தாலும், வேலை வாய்ப்பு, ஹையர் ஸ்டடீஸ், அடிப்படை வசதின்னு எல்லாத்துக்கும் பின்னோக்கி இருக்குற கிராமம் தான் அதிகம். அதனால எனக்கு வேலைக்கு கோயம்புத்தூர் தான் பெஸ்ட் ஆப்ஷனா இருந்துச்சு. பைனல் செம் முடிச்சு வேலை கனவோட காத்துட்டு இருக்குற எனக்கு, கோயம்புத்தூர் சரவணம்பட்டி ஐடி பார்க்ல ஒரு சின்ன கார்ப்பரேட் கம்பெனில இருந்து இன்டர்வியூ கார்டு வருது, எனக்கு அளவில்லா சந்தோஷம்.
‎அம்மாவ கூப்ட்டு நிறைய கனவுகளோட இன்டர்வியூக்கு கோயம்புத்தூர் போனேன்.
எனக்கும் அம்மாக்கும் முன்னாடி அந்த கம்பெனி ஹெச்.ஆர் காட்டுனது 2 மாசம் டிரைனிங் முடிச்சு நல்ல சேலரில அங்கேயே வேலைனு ஒரு மாய உலகத்தை தான். ரெண்டு மாசம் 30000 கட்டி ஆண்ட்ராய்டு டெவலப்மென்ட் கோர்ஸ் படிச்சு நெக்ஸ்ட் மன்த் ஆண்ட்ராய்டு டெவலப்பரா நல்ல சேலரில வேலைன்னு சொன்னதை நம்பி, அட்வான்ஸ் கட்டி ஹாஸ்டல் ரூம் பார்த்து கோயம்புத்தூர் லைஃப் ஸ்டார்ட் பண்ண படிச்ச முட்டாள் தான் நான் நு எனக்கு லேட்டரா தான் புரிஞ்சுது.

‎யெஸ், சி.எஸ்-ல இன்ஜினியரிங் முடிச்சவங்களுக்கே கோடிங் கஷ்டமா இருக்குற நிலைமையில, பி.எஸ்சி மேக்ஸ் முடிச்ச எனக்கு 2 மன்த்ஸ் பேசிக் ஜாவா கூட கோட் பண்ண முடியல. டெய்லி 2 ஹவர்ஸ் கிளாஸ், டெய்லி டாஸ்க் திட்டு வாங்காம இல்ல அசிங்கப்படாம முடிக்க காப்பி பேஸ்ட் கோடிங்னு நான் என்னையே ஏமாத்துன நாட்கள். ஹாஸ்டல் பீஸ்க்கும் டெய்லி அடிப்படை தேவைக்கும் ஒவ்வொரு டைம் அம்மா காசு போட்டு விடுறப்பவும், அவங்களை எல்லாம் தெரிஞ்சும் ஏமாத்துறோம்னு வலியும் இருந்துச்சு.

கோர்ஸ் முடியுற லாஸ்ட் நாள் அது என் லைஃப்ல நான் மறக்க முடியாத நாள். பைனல் லைவ் டெஸ்ட் முடிச்சு எங்க ட்ரைனி சொன்னாங்க, நல்ல ஸ்கோர் பண்ணி நெக்ஸ்ட் லெவல் போனா தான் இன்டர்வியூ, அதுல செலக்ட் ஆனா தான் இங்க ஜாப்... செலக்ட் ஆன ரெண்டு பேர் தவிர என்னையும் சேர்த்து மத்த 24 பேரும் 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'னு... டெம்பரரி ஐடி கார்டு வாங்கி வெச்சு, பார்டிசிபேஷன் சர்டிபிகேட்டோட கட்டுன 30000-க்கு பில் கொடுத்து ஐடி பார்க் கேட்டுக்கு அனுப்பிட்டாங்க.
‎இன்னைக்கு அப்பாயின்மென்ட் லெட்டர்க்கு வெயிட் பண்ணி ஊரு சொந்தம் எல்லாரும் சொல்லியும் கேட்காம எனக்காகவே நின்ன பேரண்ட்ஸ்.. வேலை இல்ல, கையில காசு இல்ல, நெக்ஸ்ட் என்னன்னு தெரியாது.. இத சொல்லி அழக்கூட தெரிஞ்ச யாரும் அங்க இல்லாம அன்னைக்கு அந்த ஐடி பார்க் கேட்டுல நின்னது இன்னைக்கு நெனச்சாலும் நான் உடைஞ்சுடுவேன்.

‎த ஃபர்ஸ்ட் ஃபெயிலியர் இன் மை லைஃப். ஆனா அந்த ஃபெயிலியர் தான் அடுத்து என் லைஃப மாத்துச்சு.. அந்த பெயின், பேரண்ட்ஸ்க்கு கொடுத்த ப்ராமிஸ், ஹாஸ்டல்ல இருந்த கொஞ்ச நல்ல பிரண்ட்ஸ் அவங்க சப்போர்ட்ல வீட்டுக்கு வேலையில ஜாயின் பண்ணிட்டேன்னு பொய் சொல்லி அங்கேயே வேற கம்பெனில வேலை தேடுனேன்.   அப்படித்தான் பேசிக் டிகிரிக்கு சூட் ஆகுற மெடிக்கல் கோடிங் ஃபீல்டுல ஜாயின் ஆனேன். ஃப்ரீ டிரைனிங் அகைன் 2 மன்த்ஸ் வித்தவுட் சேலரி.. ஹாஸ்டல் பீஸ் செலவு, வீட்டுக்கு சேலரினு எல்லாத்துக்கும் நகையை வெச்சு கடன் வாங்கி, ஃபுட்டுக்கு வெறும் மாசம் 500-க்கும் கம்மியா செலவு பண்ணி வலிக்கு முன்னால் பசி காணாம போன 60 நாட்கள்...

நிஜமாவே அந்த தோல்வியோட பெயின் தான் இன்னைக்கு நல்ல கம்பெனில சர்டிஃபைடு கோடரா, டீம் லீடா எங்க பேரண்ட்ஸ் ஆசைப்பட்ட நல்ல சேலரில வேலை பார்த்து பேமிலிய பார்த்துக்கிறேன். ஆனா என்ன இருந்தாலும் டெய்லி அந்த கேட் தாண்டி போறப்போ நான் அன்னைக்கு நின்ன அந்த மொமெண்ட் என் கண்ணுல வந்து போகும்."

‎இதுல நான் லேர்ன் பண்ண இன்னொன்னு, லைஃப்ல நமக்கு புடிச்சவங்கள கஷ்டப்படுத்தாம இருக்க பொய் சொல்லலாம், ஆனா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த பொய்யை உண்மையாக்கணும்..."


Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-007 (என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி)
Post by: Luminous on April 16, 2026, 10:48:03 PM
வணக்கம் அனைவருக்கும்…

“என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி”ன்னு சொன்னவுடனே, நமக்கு தோல்வி என்றால் முடிவா? இல்ல ஆரம்பமா?ன்னு ஒரு கேள்வி வரும்.

நான் இப்போ சொல்லப் போறது ஒரு உண்மை சம்பவம்… என் வாழ்க்கையிலே நான் பார்த்தது.

எங்க வீட்டில் வேலை பார்த்த ஒரு aunty இருக்காங்க. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. அந்த பொண்ணுக்கு நிறைய படிக்கணும்… பெரியவளா வரணும்…ன்னு ரொம்ப ஆசை.
ஆனா அவங்களோட வாழ்க்கை சூழ்நிலை ரொம்ப கடினம்.

ஒரு நாள், அவளோட அம்மாவே அவளிடம் கேட்டாங்க…
“நம்ம நிலைமையில உன்னை காலேஜ் படிக்க வைக்க முடியுமா?”ன்னு…
அந்த ஒரு கேள்வியே அவளுக்கு பெரிய அதிர்ச்சி.

அவளோட முதல் தோல்வி… அவளோட அம்மாவிலிருந்தே வந்தது.
மேல கூட, உறவினர்கள் கிண்டல் பண்ணினாங்க…
“நீயும் உன் அம்மா மாதிரி வீட்டு வேலைதான் செய்ய போற”ன்னு…
ஆனா அந்த வார்த்தைகள் அவளை உடைக்கல…
அதுவே அவளுக்கு ஒரு உறுதி ஆனது.
அவள் மனசுல ஒரு முடிவு எடுத்துக்கிட்டா…

“எனக்கு நிறைய படிக்கணும்… என் வாழ்க்கையை நான் மாற்றணும்!”ன்னு…
Public exam நேரத்துல, அவளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்ல.
அப்போ அவள் என்ன பண்ணினா தெரியுமா?

அவளே அவங்க அம்மா வேலை பார்க்கும் வீடுகளுக்கு போய் வேலை பண்ணினா…
அதுக்கப்புறம் இரவு முழுக்க விழிச்சு படிச்சா…
சோர்வு இருந்தாலும்… கஷ்டம் இருந்தாலும்…
அவள் ஒருநாளும் நின்றதில்லை.

அதுக்குப் பிறகு என்ன நடந்தது?
அவள் school topper ஆனா…
அரசு scholarship வாங்கினா…
இப்போ Engineering படிக்கிறாள்.

ஆனா கதை இங்க முடிவதில்லை…
இப்போ அவள், அவளோட வீட்டுக்கு பக்கத்துல இருக்குற குழந்தைகளுக்கு free timeல tuition எடுக்கிறாள்…
அவளோட அம்மாவை கஷ்டப்படுத்தாம, தானே படிச்சிக்கிறாள்…
எல்லா free scholarship-களையும் தேடி தேடி வாங்கி, அதையே தன் படிப்புக்கு பயன்படுத்துறா…

ஒரு நாள், அவளோட அம்மா இந்த விஷயங்களை எங்கிட்ட பெருமையோட சொல்லும்போது…
உண்மையா… என் கண்களில் கண்ணீர் வந்துச்சு…

ஏன்னா…
நாம எல்லா வசதிகளும் இருந்தும் சாதாரணமா படிக்கிறோம்…
ஆனா அவள்… எதுவும் இல்லாம இருந்தும் வாழ்க்கையை மாற்றினா…
அதனால நான் சொல்ல வர்றது என்னனா…

தோல்வி நம்மை தடுக்க வராது…
அது நம்மை முன்னேற்ற தான் வரும்.
நம்ம ஆசை உண்மையா இருந்தா…
நம்ம முயற்சி விடாம இருந்தா…
நம்ம வாழ்க்கையை நாமே மாற்ற முடியும்.

முடிவில் ஒரு வரி…
“தோல்வி ஒரு முடிவு இல்லை… அது வெற்றிக்கான முதல் படி.”
நன்றி 🙏

LUMINOUS 💜💙💚💛🧡😇💯
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-007 (என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி)
Post by: Yazhini on April 19, 2026, 05:46:26 AM
வாழ்க்கையில யாருமே சொல்லி தராத பல பாடத்த சொல்லி தரக்கூடியது நாம சந்திக்குற தோல்வி...

சின்ன வயசுல இருந்தே ஆசப்பட்ட எல்லாம் உடனே கிடைச்சுட்டா அந்த பொருளோட அருமை தெரியாதுன்னு அப்பா எதுனாலும் தாமதப்படுத்தி தான் தருவாங்க... படிப்பு விஷயத்த தவிர... குடும்பத்துலையே அட்ட கடைசி நா தான்.. அதனாலயே எனக்கு எல்லாமே கிடைச்சுடும் ஆனா கொஞ்சம் தாமதமா... தோல்வி ன்னு ஒண்ணு நிரந்தரம் இல்ல நாம அத ஏத்துக்காத வர, திரும்பி திரும்பி போராடனும் ன்னு என் அப்பா சின்ன வயசுலயே பழக்கிடாங்க... ஆனாலும் ஒவ்வொரு தோல்வியும் சொல்லி தர பாடம் ரொம்ப அதிகமா இருக்கு...

படிப்ப பொறுத்த வர அதிகபட்சம் first class with distinction தான்... B.sc முடிச்சதும் மேரேஜ்... B.Ed படிக்கிறதுக்குள்ள ஏகப்பட்ட பிரசன்ன... என்னால notes of lesson முடிக்க முடியாது. ஒழுங்கா படிக்க நேரமும் கிடைக்காது.. என் வாழ்க்கையிலேயே முதல் முறை exam ல fail ஆன... படிப்புல என் முதல் தோல்வி இது தான்.. கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல என்னால. இதுல மட்டும் தான் fail ன்னு Mam கிட்ட போய் சொன்னேன். அவங்க mostly ஒரு மார்க் கூட போடவே மாட்டாங்க. ஆனா எனக்கு போட்டு பாஸ் பண்ணிவிட்டுடாங்க... சில தோல்வி நமக்குள்ள இருக்குற ஈகோ வ கிளறி விட்டுடும் ... இனி இப்படி ஆகவே கூடாதுன்னு காலேஜ் 1 மணிக்கு முடிஞ்சாலும் அங்கேயே library ல இருந்து படிச்சுட்டு தான் வீட்டுக்கே போக ஆரம்பிச்சேன். அது தான் நா first and last fail ஆன exam. Final exam ல first class with distinction ல பாஸ் ஆகிட்டேன்...

 புதுசா பிரிண்டிங் press ஆரம்பிச்சிருந்த time அது. Business னாலே தொடக்கத்துல பல ஏற்ற இறக்கம் இருக்கும். வருமானம் ன்னு நிலையா வராது... So B.Ed முடிச்சதும் உடனே வேலைக்கு போய்யாச்சு...

காலி money purse... பல உண்மைகளை நமக்கு நல்லா சொல்லி தரும்...salary என்னவோ 8000. நா வளர்ந்த சர்ச் school தான்.. ஆரம்பத்துல இருந்த father குடும்ப சூழ்நிலை காரணமா salary ல பிடித்தம் எதுவும் பண்ணல. ஆனா அடுத்து வந்த father பிடித்தம் பண்ண போறதா சொன்னாங்க... அந்த நேரம் பண ரீதியா ரொம்ப இக்கட்டான சூழ்நிலை வேற... Father கிட்ட கேக்க போன conceive ஆன பொண்ணு ன்னு கூட பாக்காம கிட்ட தட்ட ரெண்டு மணி நேரம் வெளிய wait பண்ண வச்சுட்டு full salary தர முடியாதுன்னு திருப்பி அனுப்பிடாங்க... Financial அ யார்கிட்டயும் கேக்கவும் பிடிக்கல அது ஒரு மாதிரி அவமானமா இருந்துச்சு. சரியா அந்த நேரம் ன்னு பாத்து TET exam announce பண்ணாங்க. காலையில 8 ல இருந்து 4 வர வேலை. இது பத்தாதுன்னு டியூஷன் 5 - 8. கிடைக்குற நேரம் எல்லாம் படிச்சேன். Friends 4 பேரு சேர்ந்து குரூப் போட்டு syllabus அ யார் யாருக்கு எது நல்லா சொல்லி தர முடியுமோ மாத்தி மாத்தி சொல்லி கொடுத்து படிச்சோம்...

Exam நாளும் வந்தது... சரியா exam க்கு போற வழியில accident. கீழ விழுந்து கை கால் எல்லாம்  நல்லா சிராய்ப்பு. ரத்தம் கசிஞ்சுட்டு தான் இருந்துது. ஆனாலும் இந்த வாய்ப்ப தவற விட்டுட்டா தோல்விய ஏத்துகிட்ட மாதிரி ஆகிடுமே.... Water bottle வாங்கி கை கால கழுவிட்டு exam hall க்கு போயிட்டு நல்ல படியா exam எழுத்தியாச்சு. எழுதி முடிச்ச அப்புறம் தான் தெரிது கால்ல கொஞ்ச கூட அசைக்க முடிலன்னு. அங்க இருந்து நேரா hospital தான். Ligament tear ன்னு கால் கட்டு போட்டாச்சு....

Result வந்த அன்னைக்கு பட்ட கஷ்டம் எல்லாமே காணாம போயிடுச்சு. Pass ஆன எல்லோருக்குமே வேல. விழுந்து விழுந்து படிச்சன்னு சொல்றத விட விழுந்து வேல வாங்குனேன்னு சொல்லலாம் போல... என் வாழ்க்கைய மாற்றிய அடுத்த தோல்வி இது தான்...

இப்போ ஒரு மரணத்துகூட போராடி தோத்து போயிட்டேன். ஒட்டு மொத்த வாழ்க்கையே திருப்பி போட்டுடுச்சு. இதுலயும் போராட்டம் தொடருது. இதுலயும் பின்தங்கி இருந்துட முடியாது.... தோல்வி என்ன தான் வாழ்க்கையோட பாதைய மாத்துனாலும் அத பாசிடிவ்வா மாத்துறது நம்மக்கிட்ட தான் இருக்குன்னு நம்புறேன். இதுவும் கடந்து தான் போகும் இல்லையா... பாத்துக்கலாம் 🙃🙃🙃