FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: MysteRy on April 14, 2026, 02:39:01 PM

Title: ஒரு கணவனும் மனைவியும் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் 🙋‍♂️🙋‍♀️
Post by: MysteRy on April 14, 2026, 02:39:01 PM
(https://i.ibb.co/vxVq3g00/images.jpg) (https://imgbb.com/)

அப்போது ஒரு நாய் ஒன்று அவர்களை நோக்கி குறைத்துக்கொண்டே வேகமாக ஓடி வந்தது. இதை கண்ட கணவன் அருகில் இருந்த மனைவியை தன் இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டார், கடிக்க வரும் நாய் தன்னை முதலில் கடிக்கட்டும் என்ற எண்ணத்தில்....

வேகமாக வந்த நாய் ஒரு நிமிடம் அவர்கள் முன்னால் நின்று குறைத்துவிட்டு பின் திரும்பிப் போய்விட்டது. உடனே கணவன் தன்னுடைய மனைவி தனது செயலை எண்ணி பாராட்டி அன்பு முத்தம் தருவார் என்று எண்ணியபடியே மனைவியை கீழே இறக்கி விட்டார்.

கீழே இறங்கிய மனைவி கணவனை நோக்கி, கேட்டாளே ஒரு கேள்வி..
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
"ஒரு நாய் கடிக்க வந்தால் குச்சியில் அடிச்சு, கல்லை வீசி நாயை துரத்தரவங்கள பார்த்து இருக்கேன். ஆனா... இப்பதான் மனைவியை தூக்கி வீசி எறிந்து நாயை துரத்த முயற்சி செய்பவரை முதன் முதலா பார்க்கிறேன்" என்று கோபத்துடன் கத்தினாள்.
😳😳😳😳