FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Luminous on April 04, 2026, 09:45:26 PM
-
நண்பர்களிடையே வந்த இந்த தூரம்,
காலத்தின் கைகளா?
அல்லது மனத்தின் மாற்றமா?
நேற்று நெருக்கம் நிழலாய் இருந்தது,
இன்று மௌனம் சுவராய் நின்றது.
காலம் மாறினாலும் நட்பு மாறாது,
மனசு மாறினால் தான் தூரம் பிறக்கும்