நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்
நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.
ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.
இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்
இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்
இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.
📌 நிகழ்ச்சி விதிமுறைகள்
1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.
2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.
3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.
4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.
7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.
10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-004 இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு
“என்னுயிர் தோழி ”
இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.
உங்கள் பதிவுகளை எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு
11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
****************************************************************
IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK) 🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.
🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.
🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
என்னோட 13 வயசு வரைக்கும் நட்புனு சொன்னா அது தனிமையை போக்க ஒரு காரணமா மட்டுமே இருந்துச்சு. உனக்கு பிடிக்கும்னா எனக்கும் பிடிக்கும்னு சிலர் .நீ அவ கிட்ட பேசினாதான் நான் உன் கிட்ட பேசுவேனு விசித்திரமா சிலர். நேரம் போக்க பிரேக்ல மட்டும் பேச சிலர், இது தான் நட்பு போலன்னு அவள பாக்குற வர நினைச்சிட்டு இருந்தேன்.
7ம் வகுப்பு படிக்கிறப்போ தான் நானும் MK-ம்
சந்திச்சோம். என்ன Judge பனிடுவாளோனு பயம் இல்லாம, எந்த ஒளிவு மறைவுமில்லாம அவள்கிட்ட தோணுறத பகிந்துக முடிஞ்சது. celebrity crush சினிமா , கிசுகிசு, ரகசியம்னு எல்லாமே பகிர்ந்துகொண்டோம். முதல் முதலா ஒருத்தரோட comfortable’ah கை கோர்த்து நடக்க முடிஞ்சுது. தோள் மேல கை போட்டு ஸ்கூல் ground’ah சுத்தி சுத்தி வந்த நாட்கள் இப்போ நெனச்சு பாக்குறப்போ கூட நேற்று நடந்த மாதிரி இருக்கு. நட்பும் ஒரு உணர்வுன்னு அப்போ தன் உணர்ந்தேன்.
யார் கண்ணு பட்டுச்சோ தெர்ல அடுத்த வருஷம் அவ வேற நான் வேற class ரூம்னு பிரிக்க பட்டோம். தரை தளம் அக்னி மூலையில் நானும், மூணாவது மாடி வாயு மூளையில் அவளும். இதுக்கு நடுவில ஒரு ground. இதுல எங்க நாங்க அடிக்கடி சந்திக்கிறது. உணவு இடைவெளியில சந்திப்பு தொடர்ந்தது. பள்ளி முடிந்ததும் கொஞ்ச நேரம் நின்னு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு போவோம். அடுத்த வருஷம் இரண்டு section’dhan ஒரே class வர வாய்ப்புகள் அதிகம்னு பேசிப்போம்.
கோடை பள்ளிவிடுமுறை பறந்தோடியது. மறுபடியும் ஸ்கூலா! என்று கடுப்புல இருந்த எனக்கு MK-வின் நினைவுகள் ஆறுதலா இருந்துச்சு. முதல் நாள் அவள் வரல .சரி ஊரிலிருந்து வந்திருக்க மாட்டாள்னு நினைச்சேன் ஆனா Attendance la அவ பெயர டீச்சர் கூப்பிடல. அப்போ ஒருத்தி கேட்டா என்ன உன் friend TC வாங்கிட்டு போய்ட்டா என்ன விஷயம்னு? அப்ப தான் புரிந்தது அவ இனி வர மாட்டாள்னு.
என் வாழ்க்கையின் முதல் ஏமாற்றம் அது. “சொல்லிட்டு போயிருக்கலாமே?!”. “ஒரு வேல நான் அவ்ளோ முக்கியமில்லையோ அவளுக்கு?”. “நான் மட்டும் தான் அவளை bestie’ah நினைச்சேனோ?”. பல கேள்விகள் எனக்குள்ள ஓடிச்சி. கடைசி பக்கம் காணாம போன கதை மாதிரி இருந்துச்சு. ஒரு நாள் நானே போன் போட்டு கேட்டேன். “இல்ல அவசரமா அப்பாக்கு வேலை Transfer அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைனு இழுத்தா... குரல் தழுதழுத்தது. எனக்கு அப்போ அவ பிரிவு மட்டும் தான் என் வாழ்க்கைல ஒரு மாற்றமா இருந்துச்சு ஆனா அவளுக்கு வாழ்க்கையே மாறியிருக்கலாம்னு புரிஞ்சிகிட்டேன். அக்னி மூலை to வாயு மூலை தூரம்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு அவள சந்திக்கவே முடியாத தூரத்துக்கு கூட்டிட்டு போயிடுச்சு விதி.
என்னை விட்டு சென்ற என்னுயிர் தோழி எனக்கு விட்டு சென்ற வாழ்கை பாடம் "பற்றற்றிரு".
PS: tamil konjam kolaar so spelling mistake irundhal manikkavum. Special thanks to our Mr.Joker enaku tamil la eludha help panadhuku!