FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on March 01, 2026, 10:58:55 PM

Title: அனிச்சம் மலரவள் 🥀
Post by: Yazhini on March 01, 2026, 10:58:55 PM
                                       (https://i.postimg.cc/PNZTjzrL/IMG-20260216-192433-copy-639x723.jpg) (https://postimg.cc/PNZTjzrL)

அனிச்சம் மலர் அவள்....
ஆம்... அனிச்சம் மலர் தான் அவள்
பெரும் புயலுக்கும் அசையாது நிற்பவள்..
சிறு முகம் சுழிப்பிற்கு வாடிப்போகிறாள்
போராட்டங்கள் பல கடந்தவள்-
ஒரு சிறு கோபப்பார்வையில் திணறுகிறாள்
கரடுமுரடு பாதைகள் பல கடந்தவள் ஆயினும்
அனிச்சம் மலராகிறாள்...
அன்பினால் மீண்டும் மீண்டும்
சிதறடிக்கப்பட்டு கோர்க்கப்படுகிறாள்...

ஒரு சில பிரிவுகள்
தவிர்க்க முடியாதது மட்டுமல்ல
 தேவையானதும் 🙃
Title: Re: அனிச்சம் மலரவள் 🥀
Post by: Shreya on March 02, 2026, 05:25:06 AM
தேவையான பிரிவுகள் கசப்பதில்லை...
அவை தனிமையில் உன்னோடு
நான் பேசும் மௌன மொழிகள்!