FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on April 24, 2012, 06:24:28 AM
-
பச்சை' குத்திக் கொள்ளும் மோகம் இன்றைய இளசுகளிடம் வெகு வேகமாக அதிகரித்து
வருகிறது பச்சையில் இரண்டு வகை உண்டு. நிலையானவை. தற்காலிகமானவை.
ஒரு "பேஷனுக்காக' சில நாட்கள் மட்டும் தாக்குப் பிடிக்கக் கூடிய பச்சை
குத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
சுற்றியிருப்பவர்கள் ஆரம்பத்தில் ""ஆகா... ஓகோ...'' எனலாம் ஆனால்
பச்சையானது அலர்ஜி அபாயத்தில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.
வாழ்வு முழுவதும் வருத்தமூட்டும் தழும்பாகவும் அது நிலைத்துப் போய்
விடலாம். நமது உடம்பை படம் தீட்டும் கான்வஸ் துணி போல பயன்படுத்தக் கூடாது
என்பதற்கு இதோ இங்கு ஒரு பாடம்.....
மும்பையைச் சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் எம் சைத்தன்யா சமீபத்தில் இவன்
தனது பெற்றோருடன் கோவாவுக்குச் சுற்றுலா சென்றான்.
அங்கு அரம்பால் கடற்கரைக்குச் சென்ற சைத்தன்யா, நடமாடும் பச்சை குத்தும்
நிலையத்தைப் பார்த்து குஷியானான். ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லும் அந்த
நடமாடும் பச்சை நிலையத்தில் சில நாட்களுக்கு மட்டும் இருக்கும் தற்காலிகப்
பச்சை குத்தப்படும்..
பெற்றோரிடம் அனுமதி வாங்கி அந்தப் பச்சை நிலையத்துக்கு ஓடிய சைத்தன்யா,
கையிலும் காலிலும் பச்சை குத்திக் கொண்டான். பச்சை குத்தியதும் மேலும்
குஷியானான். அதைத் தானே பார்த்து ரசித்தும் மற்றவர்களிடம் காட்டியும்
மகிழ்ந்தான்..
சில நாட்களில் அவர்கள் கோவா சுற்றுப் பயணம் முடிந்து மும்பை திரும்பி
விட்டார்கள். பச்சையைப் பார்த்தால் எங்கே பள்ளியில் திட்டுவார்களோ என்று
சைத்தன்யா பயந்து கொண்டிருந்த வேளையில் அது அரிக்க ஆரம்பித்தது..
""விரைவிலேயே அந்த அரிப்பு மிகவும் மோசமானது. பச்சை குத்திய இடங்கள்
சிவந்து விட்டன. அதிலிருந்து ஒரு திரவமும் கசியத் தொடங்கியது.
பயமுறுத்தும் விதமாக அவனது வயிற்றிலும் அது மாதிரியான அறிகுறிகள் தென்படத்
தொடங்கின'' என்கிறார் வருத்தம் நீங்காத குரலில் சைத்தன்யாவின் அம்மா
நமீதா. பச்சை குத்திய இரண்டு வாரங்கள் கழித்தே இந்த அறிகுறிகள் ஏற்பட்டன..
அவனுக்கு ""இரிட்டன்ட் கான்டாக்ட் டெர்மட்டிடிஸ்' என்ற ஒவ்வாமை (அலர்ஜி)
ஏற்பட்டிருக்கிறது. பச்சை மையில் உள்ள வண்ணம் தோலைப் பாதிப்பதால் இது
ஏற்பட்டுள்ளது. இவனைப் போல் "பச்சை' குத்திய பெண்களும்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.