FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Luminous on February 21, 2026, 10:37:22 PM
-
சூழல் பல மாறினும்
சொல்லின் செம்மை மாறாதிருத்தல்
அதுவே மனிதன் காக்க வேண்டிய
மிக உயர்ந்த காவல்💜
கூட்டம் பெருகின்
பலர் முகம் மலரும்🤎
தனிமை வரின்
அதே முகம் திசை மாறும்.💙
அது உலகின் இயல்பு
அதை உணராத மனமே
துன்பம் கொள்ளும்.
நேற்றின் நட்பு
இன்றின் நிலைமையால் சாய்ந்திடின்,
அது நட்பு அன்று
நேரத்தின் நிழல்.💛
எந்நேரமும்
ஒரே மனம் கொண்டிருத்தல்
அரிய செயல்
ஆனால் அதுவே அறம்.🧡
நிலவு மேகத்தால் மறைந்தாலும்
அதன் ஒளி மாறாது💚
அதைப் போல
சூழ்நிலை மாறினாலும்
நம் இயல்பு மாறாதிருப்பதே
உயர்ந்த தத்துவம்.💙
ஏனெனில்
உண்மை என்பது
காலத்தோடு பயணித்தாலும்
நேரத்தோடு மாறாத ஒன்று.💯💐🕊🧘♀️🍭👍luminous
-
அருமையான கவிதை லூமினஸ். உண்மையை உரக்க சொல்லும் வரிகள். எந்நேரமும் ஒரே மனம் கொண்டிருத்தல் அரிய செயல்
ஆனால் அதுவே அறம் 💜✨🍀