FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ஸ்ருதி on April 24, 2012, 06:17:54 AM
-
பலசரக்கு வாங்குவதற்காக பைகளை எடுத்துக் கொண்டு பஜாருக்கு புறப்பட்டேன். வழக்கமாக சரக்கு வாங்கும் ராம் ஸ்டோருக்குப் போனேன். ஏழெட்டுப் பேர் சரக்கு வாங்கிக் கொண்டிருந்தனர். சரக்குச் சிட்டையை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்த ஒரு ஸ்டூலில் உட்கார்ந்தேன்.
அப்போது சரக்கு வாங்கிய இன்னொரு பெண்ணிடம் ``அம்மா உங்களுக்கு முன்னூற்று நாற்பது ரூபாய்'' என்றார் கடைக்காரர். அந்தப் பெண் வசதியானவளாகத் தெரிந்தாள். மூன்று தங்கச் செயின், டாலடிக்கும் வைரக் கம்மல், தங்க வளையங்கள், பட்டுச்சேலை என ஜொலித்தாள். அந்தப் பெண் பர்ஸ் எடுத்து ரூபாயை எண்ணி விட்டு ``ரூபாய் இருபத்தைந்து குறைகிறது'' என்று கடைக்காரரிடம் கொடுத்து, "நாளை வரும் போது இருபத்தைந்து ரூபாய் கொண்டு வந்து தருகிறேன்'' என்றாள்.
கடைக்காரர் அந்தப் பெண்ணுக்கு பதில் சொல் லாமல் ``டேய் பையா'' அம்மாவுக்குக் கொடுத்த சரக்கில் "இருபத்தைந்து ரூபாய் சரக்கை எடுத்து விடு'' என்றார்.
கடைப்பையனும் போட்ட சரக்கில் உரிய ரூபாய்க்குச் சரக்கை எடுத்துக்கொண்டு, அந்த அம்மாவிடம் பையைக் கொடுத்தான். அந்தப்பெண் அதிர்ச்சி விலகாமல் அங்கிருந்து முணுமுணுத்தபடி நகர்ந்தாள்.
எனக்கு இரண்டு பைகளில் சரக்குப் போட்டு முடித்ததும், `அம்மா உங்களுக்கு ரூபாய் ஐநூற்றி நாற்பது'' என்றார், கடைக்காரர்.
அவர் சொன்னதும் நான் திடுக்கிட்டு எழுந்தேன். காரணம் நான் மணிபர்ஸை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். அவ்வளவு பெரிய பணக்காரப் பெண்ணுக்கே 25 ரூபாய் குறைந்ததற்கு சரக்கை எடுக்கச் சொல்லி விட்டாரே, மாங்கல்யம் கோர்த்த நான்கு பவுன் தங்கச் சங்கிலி மட்டுமே அணிந்து எளிய உடையில் இருந்த நான் எம்மாத்திரம்!
ஆனால், என் முகபாவனையைப் பார்த்த கடைக்காரர் `என்னம்மா ரூபாய் கொண்டு வர மறந்து விட்டதா?'' என்றார், இதமான குரலில். ``ஆமாம் ஐயா, அவசரத்தில் ரூபாய் எடுக்காமல் வந்து விட்டேன், சரக்குப்பை இரண்டையும் கடையில் வைத்திருங்கள் வீட்டுக்குப் போய் ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சரக்கை வாங்கிக் கொண்டு போகிறேன்'' என்றேன், நான்.
``வேண்டாம், அம்மா! நீங்கள் சரக்கை கொண்டு போங்கள். ரூபாய் நாளைக்கு கூட கொண்டு வாருங்கள். இந்தாருங்கள் ஆட்டோவுக்கு ஐம்பது ரூபாய். வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டிய கடைக்காரர், ``நீங்கள் கிருஷ்ணமூர்த்தியோட மனைவிதானே? என்றார்.
``ஆமாம் அவரைத் தெரியுமா? உங்களுக்கு?'' ஆச்சரியமாய் கேட்டேன்.
``என்னம்மா தெரியுமான்னு லேசாகேட்டுட்டீங்க. இந்தப் பஜாரில் பலசரக்கு வியாபாரத் திற்குப் பெரிய புரோக்கர் அவர்தானம்மா! பெரிய நாணயஸ்தர். அவரை எவ்வளவும் நம்பலாம்... '' என்றார் கடைக்காரர்.
சரக்கை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த எனக்கு, என் கணவரைப் பற்றி கடைக்காரர் வானளாவப் புகழ்ந்து பேசியதில் பெருமை பிடிபடவில்லை.
ஒவ்வொரு நேரங்களில் வீட்டில் எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடக்கும் போது ``இவ்வளவு நாள் பாடுபட்டு நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்?'' என்று என் கணவரிடம் அலட்சியமாகக் கேட்டிருக்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அப்படிக் கேட்டது எப்படிப்பட்ட மூடத்தனம் என்று மனதுக்குள் உறைக்க, மானசீகமாக அப்போதே கணவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
-
kutti kathai arumai
ezhuthiyatha..
ithu ezhuthiyathaaga irunthal manamaarntha paaruttukkal..
copy and paste ah shruthi
mannikavum ipdi oru kelviku.....