FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Oonjal on February 12, 2026, 10:24:15 AM

Title: 🎧🎶இசையின் மடியில்🎶🎧
Post by: Oonjal on February 12, 2026, 10:24:15 AM
🎧🎶 இசையின் மடியில்🎶🎧

     🥁🎙️🎧🎻🥁🎙️🎧🎻

படம் : லஷ்மி

பாடல் : ஆலா ஆலா

பாடகர் : சைந்தவி GV பிரகாஷ் குமார்

இசை : சாம் CS

பாடல் ஆசிரியர் : கார்க்கி

    ....................✨✨✨.....................

ஆலா ஆலா வானில் ஏற வா
வெண்ணிலாவை மூட்டை கட்டி
மண்ணில் கொண்டு வா வா

ஆலா ஆலா பறந்து செல்ல வா
வானவில்லை தாண்ட வா

ஈர காற்றிலே தூரம் செல்ல வா
நீல நீளம் தாண்ட பாலம் செய்ய வா
மேக மேடையில் ஜோடி சேர வா
மின்னல் வெட்டில் ஆட வா

ஆலா ஆலா காதல் கொண்டதாலா
தூரம் இல்லை அந்த வெண்ணிலா
ஆலா ஆலா காதல் கொண்டதாலா
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா

வா சிறு சிறகினில்
முழு மதியினை ஏந்த
வா உனதழகினில் எனதழகினை தீண்ட வா

வா உயர் உலகினில் உயிர் உரசியே ஆட
வா முடிவிலியினை நொடி பொழுதினில் தாண்ட வா

விண்மீன்கள் தாண்டி
கோள்கள் யாவும் தாண்டி தாண்டி
வேர் ஒரு பூமி உண்டாக்கலாம்
மேகத்தில் மூடி கொண்டு வந்த வெண்ணிலாவை
தூசி தட்டி சுத்தம் செய்து
காதல் வானில் ஒட்டி கொள்ளலாம்

ஆலா ஆலா காதல் கொண்டதாலா
தூரம் இல்லை அந்த வெண்ணிலா
ஆலா ஆலா காதல் கொண்டதாலா
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா

   ...........✨✨✨✨✨✨.............