FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on February 10, 2026, 01:34:13 AM

Title: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on February 10, 2026, 01:34:13 AM
உன் மௌனமே பதிலாகக் கிடைக்கும்போது,
அன்பை எதிர்பார்ப்பவள் என்னவோ முட்டாளோ?
Title: Re: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on February 10, 2026, 01:36:24 AM
கொதிக்கும் புனலை எடுத்து - என்
துடிக்கும் இதயத்தின் மேல் ஊற்றுகிறேன்!
இப்போதாவது நீ அழிந்துவிட மாட்டாயா?
Title: Re: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on February 10, 2026, 01:37:17 AM
என் இதயமே என்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது...
இன்னும் எத்தனை முறை தான் - நீ
தோற்றுப் போவாய்? என வினவி!
Title: Re: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on February 10, 2026, 01:38:16 AM
பேரன்பு வேறு, பேராசை கொண்ட காதல் வேறு...
இதை எப்போதுதான் நீ புரிந்து ​கொள்வாய்??
Title: Re: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on February 10, 2026, 01:40:39 AM
நித்தம் நித்தம் சிதைப்பதைத் தவிர்த்து,
மொத்தமாய் என்னைக் கொன்று முடித்துவிடு!
Title: Re: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on March 12, 2026, 12:26:10 AM
கோபம் உன்னைக் கொல்லும் என்றார்கள்,
ஆனால் அன்பும் அதையேதான் செய்கிறது!
Title: Re: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on March 12, 2026, 12:30:39 AM
பெண்..

​"இவளைத் தான் உடைப்பார்கள்"
"இவளைத் தான் சிதைப்பார்கள்"
"இவளைத் தான் அழவைப்பார்கள்"
"இவளைத் தான் விழவைப்பார்கள்"

​எதனால்?
​இவள் இன்னமும் சிறுபிள்ளை போல் அவளது இயல்பில் இருப்பதால்தானோ என்னவோ!!
Title: Re: என் கிறுக்கல்கள்!!
Post by: Shreya on March 12, 2026, 12:41:32 AM
தனிமை..

​புரியாத புதிர் போல நீயும், புரிந்தும்
புரியாதது போல உன் வார்த்தைகளும்...
உன் மௌனத் திரைக்குப் பின்..
என்னை சிறைவைக்கிறாய்!!