FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on February 09, 2026, 12:25:12 PM

Title: காதல்.!
Post by: joker on February 09, 2026, 12:25:12 PM
பெயர் இல்லை,
முகமும் கண்டதில்லை
என் உள்ளத்தின்
ஆழத்தில் ரீங்காரமிடும்
அமைதியான இசை
நீ

நான் உன்னை
என் சுவாசத்தோடு கலந்த
ஒரு உணர்வாகவே நேசிக்கிறேன்.

நீ போனாலும்
நான் உடைந்துவிட மாட்டேன்,
ஏனெனில்
நீ என்னுள்
முழுமையாகவே
கலந்துவிட்டதனால்

உன் மௌனம்
என்னை கொல்லும்,
உன் ஒரு வார்த்தை
என்னை உயிர்ப்பிக்கும்
இடையில் சிக்கிய
இந்த உயிர்தான்
பாவம்

உன்னை நான் நேசிப்பதை
பூக்கள் கொடுத்து
வெளிப்படுத்த தெரியவில்லை
ஏனெனில்
இது ரத்தத்தில் கலந்த
உணர்வு  நீ

நீ அருகில் வந்தால்
என் உலகம் சுருங்குகிறது,
நீ விலகினால்
என் நெஞ்சு
வெடிக்கப் போகும்
அணுகுண்டு போல
பதறுகிறது

காதல் என்றால்
உன்னோடு வாழ்வது மட்டும் அல்ல
உன்னை நினைத்துக்கொண்டே
என்னை நான்
மறந்துபோகிற
அந்த சுகம் தான்
காதல்.


****Joker****