FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on February 05, 2026, 07:40:01 AM
-
விதியின் சதியோ? இல்லை வாழ்வின் சாபமோ?
யாரும் தீண்டாத காட்டில் பூத்தத் தனிமை மலரோ நான்?
அன்பு வறண்ட பாலைவனத் திசைகளில்,
என் கால்கள் ஏன் இன்னும் தழும்பேற நடக்க வேண்டும்?
எவர் மனதிலும் ஒளியேற்றாத இந்த உயிர்,
இனி எதற்காக இங்கே மெல்ல அணைய வேண்டும்?
யார் பொருட்டும் இல்லாத ஒரு தேவையற்றப் பக்கம் நான்,
வாசிப்பார் யாருமின்றிச் சிதைந்துப் போவதே மேல்!!