FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Ramesh GR on January 20, 2026, 01:18:40 PM

Title: மைல்கல்
Post by: Ramesh GR on January 20, 2026, 01:18:40 PM
என்னை பார்த்து வியந்தார் சிலர்

என் மேல் உள்ள தூரம் பார்த்து மளைத்தார் சிலர்

வீட்டுக்கு வரும் போது என்னை பார்த்து மகிழ்ந்தான்

அவனே மீண்டும் வேலைக்கு செல்லும் போது என்னை பார்த்து கவலை கொண்டான்

நான் மாறவில்லை என்னை பார்க்கும் மனது மட்டுமே மாறுகிறது

என்னை சாமி ஆக்கி பூஜை செய்த வேடிக்கையும் உண்டு

யார் என்னை எப்படி பார்த்தாலும் நான் என் நிலை உணர்ந்தேன் நிலையாய் உள்ளேன்

நிலையற்ற மனிதனே யார் என்ன சொன்னால் என்ன உன் நிலை அறிந்து செயல்பாடு

உன் உயர்வை யாரும் தடுக்க முடியாது...

(https://i.ibb.co/sJFTjDnm/images-8.jpg) (https://ibb.co/sJFTjDnm)