FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on January 18, 2026, 04:54:08 PM

Title: நட்பு 🤝🤙 (Padithathil Pidithathu 📖)
Post by: MysteRy on January 18, 2026, 04:54:08 PM
(https://i.supaimg.com/7e43d9dc-7c9e-4957-911f-c1e557756819.jpg)

கண்டதும் கை குலுக்கி
கன நேரத்தில் காணாமல் போகும்
மின்னல் நட்பு..
 
சந்திப்பில் மட்டும் சரசமாடும்.. பிறகு சிந்திக்க மறந்து போகும்
தாமரை இலை மேல் தண்ணீர் நட்பு..

காரியம் முடிந்ததும்
வீரியம் குறைத்து விலகிப் போகும்
சந்தர்ப்பவாத நட்பு..

தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சின் ஓரத்தில் நினைந்து கசிந்துருகும்
ஓயாத அலை நட்பு..

 கூட இருந்தே கூடி மகிழ்ந்திருந்து
குழி தோண்டி புதைத்துப் போகும் கூடா நட்பு...

இன்பமிருக்க இணைந்திருக்கும்
துன்பம் வர தூரப் போகும்
துச்ச நட்பு..

நித்தியம் என்று சத்தியம் செய்யும்
புரிதலில் பிணக்கு கொண்டு பிரிந்து போகும்
புத்தி_கெட்ட நட்பு...

நட்பின் தொடக்கம் முதல்
நாடித் துடிப்பின் அடக்கம் வரை கூடி வரும்
உயிர் நட்பு...