FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on January 14, 2026, 07:32:41 PM

Title: 🚶தடுமாற்றம்🚶
Post by: Yazhini on January 14, 2026, 07:32:41 PM
ஒரு சில தடுமாற்றங்கள்...
தடம் மாற்றமா அல்லது வெறும் தடுமாற்றமா?
காலத்தின் கையில் பொம்மைகளாய்..
உணர்வுகளின் பிடிக்குள் கைதிகளாய்...
ஆசை நதியில் விழுந்த இலையாய்...
நங்கூரமற்ற கப்பலாய்...
நகர்கிறது சில உறவுகள்...
நினைவுகளின் சாயலாய்
தடங்கள் பதிக்கும் தடுமாற்றம் அதனை
திருத்தியெழுத முயலும் நிகழ்காலம்....✍️