FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on January 14, 2026, 03:05:53 AM
-
தொலைந்த உன்னை மீட்டெடுக்க
எத்தனை முறையோ போராடிவிட்டேன்...
செய்த தவறுக்கு
மன்னிப்பும் கேட்டுவிட்டேன்...
ஆனால் உன்னிடமோ...
எந்த சலனமும் இல்லாத
மௌனம் மட்டுமே!!
வெறுப்பா...விலகலா?
அல்லது வெறும் வெறுமையா?
உன் மௌனத்தின் மொழி புரியாமல்
நான் திணறுகிறேன்...
உன் மௌனம்...
நம் உறவின் முற்றுப்புள்ளியா?
அல்லது வெறும் இடைவேளையா?