FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on January 07, 2026, 11:06:18 AM

Title: மீண்டும் வேண்டும் ஒரு ஜென்மம்!!
Post by: Shreya on January 07, 2026, 11:06:18 AM
கருவறை இருட்டில் வெளிச்சம் தந்தவளே..
இன்று உன் கல்லறை நிழலில் கண்ணீரில் நிற்கிறேன்!
ஆறடி மண்ணுக்குள் நீ போன பின்பும்
உன் அன்பின் வாசனை அகலவில்லை அம்மா..

​யார் யாரோ வந்தார்கள் ஆறுதல் சொல்ல..
ஆனால் உன் மடி தந்த இதத்தை யார் தருவார்??
தடுமாறும் போதெல்லாம் உன் குரல் கேட்கும்..
ஆனால் அதுவும் இன்று ஏனோ நின்றது..

​கண்களை மூடும் போதே உன்னை அழைத்தேன்
"இன்றாவது என் கனவில் வா அம்மா" என்று..
இருண்ட என் தூக்கத்தின் இடையே
உன்னை தேடுகின்றேன்..
நீ அருகில் இருக்கும் ஒரு சுவடு கூட
இல்லை அம்மா..

​முன்பெல்லாம் எப்போதாவது வந்து போவாய்..
என் தலையை கோதிவிட்டு தழுவி செல்வாய்..
இப்போது என்ன கோபம் என் மீது அம்மா..
என்னை தனியே தவிக்கவிட்டு எங்கே சென்றாய்..

​முகமும் மறக்கவில்லை.. குரலும் மறக்கவில்லை..
இன்னொரு முறை "**மா" என கூப்பிடு அம்மா..
ஒரே ஒரு நொடி என் கனவில் வந்து விடு
"நான் இருக்கிறேன்" என்ற ஒரு வார்த்தை போதும் அம்மா..

என் அழுகுரல் உனக்கு கேட்கவில்லையா??
ஏழு பிறப்பிலும் நீயே என் தாயாக வேண்டும்..
என் ஏழு பிறவி பாவமும் உன்னால் தீர வேண்டும் அம்மா!!