FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on January 07, 2026, 01:00:26 AM
-
விழியோரம் நதிபெருக, விதியோரம்
வழி தொலைய.. அவள் நிழலோடும்
பேசத் துணையின்றி நின்றிருந்தாள்..!!
அவள் முன் தோன்றிய இறைவன், என்ன வரம்
வேண்டும் கேள் என.. பேதையோ
கண்ணீரைத் துடைக்காமல்
கைகூப்பி வேண்டினாள்..
அழுது தீர்க்கவே இந்த பிறவியோ??
ஆயிரம் சொந்தம் இருந்தாலும்,
யாரும் எனக்கில்லை என்ற இந்த
வெறுமை..
மனமெல்லாம் ரணமாகி போனபின்
வரம் ஏனோ???
வாழ மனமில்லை இவ்வுலகில்,
"என் ரணங்கள் ஆற.. ஒரு நீண்ட துயில் போதும்"🙏