FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 31, 2025, 07:42:19 PM
-
நினைவில் நிற்கும் அன்பான இதயங்களுக்கு
இந்த வருடம் வாழ்க்கையில்
நல்ல நண்பர்களாக சிலர்
நல்ல சகோதரர்களாக சிலர்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன கோபங்கள்
சின்ன சின்ன புன்சிரிப்புகளை
பகிர்ந்துகொண்டோம்
சில உறவுகள் எனக்கு கிடைத்தது
என் வரம்
சில உறவுகளுக்கு விழிப்போடு இருக்க
என்னோடு பழகியது பாடம் என கொள்க
நட்பு என்பது "நிலா" போல
உங்களுடன் பழகிய நினைவுகள்
"நட்சத்திரங்கள்" போல
என்றும் வானம் இருக்கும் வரை
என் நினைவில் ஜொலித்துக்கொண்டிருக்கும்
என் அன்பான இதயங்களுக்கு
என் பேச்சோ
என் கோவமோ
என் சிரிப்போ
என் மௌனமோ
உங்களை காயப்படுத்தி இருந்தால்
மன்னிக்கவும்
இந்த புத்தாண்டு உங்களுக்கு
வாழ்வில் மகிழ்ச்சியையும் ,ஆனந்தத்தையும்
கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
HAPPY NEW YEAR
GOD BLESS YOU
மீண்டும் சந்திப்போம் :) :blank:
****Joker****
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ...
மலரும் ஆண்டு இனிதாக அமைய வாழ்த்துகள் ✨✨✨